07.09.2019 சனிக்கிழமை அன்று நியமத்தில் தேவ பிரசன்னம் நடைபெற்றது. நியமத்தில் அன்னை காலா பிடாரி அம்மன், ஆயிரத்தளி காலா பிடாரனேஷ்வரர் ஆலயம், பெரும்பிடுகு முத்தரையர் கோவில், கோட்டை முனி ஆண்டவர் ஆலயம் அமைக்க தேவ பிரசன்னம் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் திருவையாறு காவிரி படித்துறையில் முத்தரையர் குல முன்னோடிகளுக்கும், பேரரசர் சுவரன் மாறன் அவர்களுக்கும் திதி கொடுத்து வழிபாடு நடைபெற்றது. அதன் பிறகு புதுக்கோட்டை பேரையூர் நாகநாதர் ஆலயத்தில் பரிகார பூஜை, திருக்காட்டுப்பள்ளி அக்னீஷ்வரர் சிவன் கோவில், கோவிலடி அப்பக்குடத்தான் பெருமாள் கோவில், வீரசிங்கம்பேட்டை அம்மன் கோவில் ஆகிய திருக்கோவில்களில் பரிகார பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை உறுப்பினர்களாக கொண்டு அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அறக்கட்டளையின் மூலம் நியமத்தில் ஆலயம் அமைக்கவும், முத்தரையர் மன்னர்கள் அமைத்து வழிபட்ட கோவில்களை புனரமைக்கவும், வரலாற்று மீட்டுருவாக்க பணிகள், தொல்லியல் மேற்பரப்பாய்வு செய்தல் போன்ற பணிகள் செய்தல். மேலும் முத்தரையர் சமுதாய பண்பாடு, கலாச்சாரம், மரபுவழி ஆன்மீக வழிபாடு முறைகளை மக்களிடம் சேர்த்தல். கல்வி, பொருளாதார மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல். சமூக விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளுதல். ஆலயங்கள் அமைத்து புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ளுதல். கல்வி நிலையங்களை அமைத்தல் போன்ற சமூக விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளுதல். வரலாறு, பண்பாடு, ஆன்மீகம், கல்வி, தனிமனித ஒழுக்கம் போன்ற கருத்துக்களை முன்வைத்து கருத்தரங்குகள் நடத்துதல், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது.
07.09.2019 சனிக்கிழமை அன்று நியமத்தில் தேவ பிரசன்னம் நடைபெற்றது. நியமத்தில் அன்னை காலா பிடாரி அம்மன், ஆயிரத்தளி காலா பிடாரனேஷ்வரர் ஆலயம், பெரும்பிடுகு முத்தரையர் கோவில், கோட்டை முனி ஆண்டவர் ஆலயம் அமைக்க தேவ பிரசன்னம் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் திருவையாறு காவிரி படித்துறையில் முத்தரையர் குல முன்னோடிகளுக்கும், பேரரசர் சுவரன் மாறன் அவர்களுக்கும் திதி கொடுத்து வழிபாடு நடைபெற்றது. அதன் பிறகு புதுக்கோட்டை பேரையூர் நாகநாதர் ஆலயத்தில் பரிகார பூஜை, திருக்காட்டுப்பள்ளி அக்னீஷ்வரர் சிவன் கோவில், கோவிலடி அப்பக்குடத்தான் பெருமாள் கோவில், வீரசிங்கம்பேட்டை அம்மன் கோவில் ஆகிய திருக்கோவில்களில் பரிகார பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை உறுப்பினர்களாக கொண்டு அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
அறக்கட்டளையின் மூலம் நியமத்தில் ஆலயம் அமைக்கவும், முத்தரையர் மன்னர்கள் அமைத்து வழிபட்ட கோவில்களை புனரமைக்கவும், வரலாற்று மீட்டுருவாக்க பணிகள், தொல்லியல் மேற்பரப்பாய்வு செய்தல் போன்ற பணிகள் செய்தல். மேலும் முத்தரையர் சமுதாய பண்பாடு, கலாச்சாரம், மரபுவழி ஆன்மீக வழிபாடு முறைகளை மக்களிடம் சேர்த்தல். கல்வி, பொருளாதார மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல்.
சமூக விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளுதல். ஆலயங்கள் அமைத்து புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ளுதல். கல்வி நிலையங்களை அமைத்தல் போன்ற சமூக விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளுதல். வரலாறு, பண்பாடு, ஆன்மீகம், கல்வி, தனிமனித ஒழுக்கம் போன்ற கருத்துக்களை முன்வைத்து கருத்தரங்குகள் நடத்துதல், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது.