தமிழ் நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்
Jan 02, 2026
சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சி வரகனேரியில் உள்ள தனரத்தினம் மஹாலில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது...!
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர், முனைவர் ஐயா RV அவர்கள் மற்றும் சிங்கத்தளபதியார் அண்ணன் RV.ராம்பிரபு B.com அவர்கள், சிங்கத்தமிழர் முன்னேற்றக் கழகம் மாநிலத் தலைவர், சிங்கத் தமிழர், முனைவர் RV.பரதன் BA.BL., அவர்கள், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், பாசத்தளபதியார் அண்ணன் RV.பாலமுருகன் B.com ஆகியோர் தலைமையில் நடைபெற்றது...!
விழாவில், பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் அவர்கள் சிறப்புரையாற்றினார், பேரரசர் தபால் தலை வெளியிட துணை நின்ற பேராசிரியர் இராம.சீனிவாசன் அவர்களுக்கு செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டது...!
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சிறப்பு தபால் தலை வெளியிட்ட பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவிப்பது, முத்தரையர் மன்னருக்கு நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைத்துக் கொடுத்த எடப்பாடியார் தலைமையிலான அஇஅதிமுகவுக்கு நன்றி தெரிவிப்பது,
இதற்கு முழு முயற்சி எடுத்த தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர், வாழும் வள்ளல் பாரி, முனைவர் ஐயா RV முத்துராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிப்பது, பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு திரு உருவப்படம் திறக்க வேண்டும். முத்தரையர் மன்னர்களின் வரலாறுகளை பள்ளி கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்...!
மே 23 பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும், 29 வழங்கு பெயர்களில் தமிழகம் முழுக்க பரவி வாழும் முத்தரையர்களை ஒருங்கிணைத்து ஒரே அட்டவணையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து பத்து சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது...!
முத்தரையர் குலம் காக்கும் கொற்றவை பிடாரி மற்றும் அவளது செல்லக் குழந்தை பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் அருளோடு, வாழும் வள்ளல் பாரி, முனைவர் ஐயா RV முத்துராஜா அவர்களின் முழு ஆதரவுடன், முத்தரையர் பேரினத்தின் 1.25 கோடி முத்தரையர் மக்களின் ஒத்துழைப்புடனும்,
சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர், சிங்கத் தமிழர் முனைவர் RV.பரதன் BA.BL., அவர்களை வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் ஆக்குவது எனவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது....!
இந்நிகழ்வில, தமிழகம் முழுவதிலும் இருந்து 1500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர், கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு உணவு விருந்து அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது....!
தமிழக முழுவதிலும் இருந்து கலந்துகொண்ட அத்தனை நிர்வாகிகளுக்கும் எங்களுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....!
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம்
#SingathTamilarMunnetraKazhagam #TamilNaduMutharaiyarMunnetraSangam #StateGeneralCouncil #Trichy #Varaganeri #ThanarathinamMahal #MutharaiyarPride #MutharaiyarHistory #PerumbiduguMutharaiyar #SpecialPostalStamp #ThankYouModiJi #ThankYouCentralGovernment #AIADMK #EPS #SocialJustice #CommunityUnity #MutharaiyarRights #TamilNaduPolitics #2026AssemblyElection #Leadership #MassiveParticipation