காவல்காரன்
Jan 24, 2026
🔴🟡கள்ளர் கூட்டத்தை எதிர்த்து போரிட்ட முத்தரையன்
🟡இந்தக் கல்வெட்டு ஒரு போரில் வீரமரணமடைந்த வீரனைப் பற்றியும், அவனது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தைப் பற்றியும் கூறுகிறது.
🔴🟡கள்ளர் கூட்டத்தினர் ஊருக்குள் புகுந்து, ஊர் மக்களின் ஆடைகளையும் உடைமைகளையும் திருட முயன்றனர்.
அப்போது அந்த ஊரைச் சேர்ந்த வீரன் வள்ளுவனான கலிவீரிய முத்தரையன் தந்தையுடன் சேர்ந்து கள்ளர்களுக்கு எதிராக துணிச்சலாகப் போராடினான். அந்தப் போரில் அவன் தனது உயிரைத் தியாகம் செய்தான்.
அந்த வீரன் கலிவீரிய முத்தரையனுடைய தியாகத்தை போற்றியும் , அவனது தந்தையின் வீரத்தையும் பாராட்டி ஊர் மக்கள் மற்றும் அரசு சார்பில் 'இலிப்பட்டி ' ஊரில் நிலமும், மனையும் (வீடு கட்டும் இடம்) வரியில்லா நிலமாக (இறை) வழங்கப்பட்டது.