மாமன்னர் இராசேந்திரன் சோழன்
Aug 02, 2024
🐅🐅🐅 மா மன்னர் இராஜேந்திர சோழர் அவதரித்த தினம் இன்று 🐅🐅🐅
🐅 ஆடி திருவாதிரை தனக்கென்று ஒரு மாபெரும் பெருமையை ஆயிரம் ஆண்டுகளை தாண்டி சுமந்து வருகிறது.
🐅 அத்தகு பெருமை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டே இருக்க போகிறது ஆடி திருவாதிரைக்கு!
🐅 தெற்காசியாவில் பல இடங்களில் இவரது சிலை இன்றும் புதிதாக திறக்கப்பட்டு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
🐅 தஞ்சையில் அவதரித்து,கங்கை கொண்ட சோழபுரத்தில் தனது அரசை நிறுவி, தரணியில் தெற்காசியா முழுவதும் புலிக்கொடியை பறக்கவிட்ட பெருமைக்கும், வீரத்திற்கும், பராக்கிரமத்திற்கும், சொந்தக்காரர் தான் மா மன்னர் இராஜேந்திர சோழர்.
🐅 தன் தந்தை மா மன்னர் இராஜ இராஜ சோழரின் புகழையும் காப்பாற்றி,அவரைப் போலவே சோழ தேசத்தின் புகழையும் காப்பாற்றி, அனைத்தையும் உச்ச இடத்திற்கு அழைத்துச் சென்று அழகு பார்த்த மாவீரர் தான்,மா மன்னர் இராஜேந்திர சோழர்.
🐅 சளைக்காத வீரம்,எதிரிகளை நடுங்க வைத்த பராக்கிரமம்,யுத்தத்திற்கு சென்ற இடமெல்லாம் நில நடுக்கம் வந்து விட்டதா என்று எதிரிகள் அஞ்சும் அளவிற்கு படைபலம் என்று, இவரின் வீரத்தை பெருமை படுத்திக் கொண்டே இருக்கும் அளவிற்கு எண்ணிலடங்கா அதிசயங்கள் உண்டு.
🐅 தரை மட்டும் அல்ல,கடலும் இவரது சாம்ராஜ்ஜியமே!
🐅 அலை கடல் மீது பல களம் கண்டவர்.
🐅 இவரது கப்பற்படை மிக பிரபலமான கப்பற்படை ஆகும்.
🐅 பெரும் யானைப்படையே கப்பலில் யுத்தத்திற்கு செல்லும்,அத்தகு வலுவான கடற்படையை வைத்திருந்தார்,மா மன்னர் இராஜேந்திர சோழர்.
🐅 எந்தளவிற்கு வீரமும்,பராக்கிரமும் இவரைச் சுற்றி சூழ்ந்திருந்ததோ ,அதே அளவிற்கு சிவ பக்தியும் சூழ்ந்திருந்தது.
🐅 தந்தையைப் போலவே சிவ பக்தியை உலகிற்கு பறை சாற்ற பிரமாண்டமான சிவ தலத்தை நிறுவினார்.
🐅 மா மன்னர் இராஜ இராஜ சோழரின் வெற்றி பயணத்தில்,மா மன்னர் இராஜேந்திர சோழரின் பங்கு அளப்பரியதாகும்.
🐅 மும்முடி சோழரின் களிறு என்று அழைக்கப்பட்ட இராஜேந்திர சோழர், பாண்டியர்கள்,சேரர்கள்,ஈழ தேசம்,சாளுக்கியம் என்று போரிட்ட அனைத்து யுத்தங்களிலும் வெற்றி வாகை சூடினார்.
🐅 கங்கைக்கு சென்ற போது இரண்டு ஆண்டுகள் யுத்தம் நடந்தது.
🐅 வரலாற்றில்,ஒரு யுத்தத்தில் கூட தோல்வியை காணாத பேரரசர்கள் வெகு சிலர் மட்டுமே.
🐅 அத்தகு பெருமை மா மன்னர் இராஜ இராஜ சோழர், மற்றும் அவரின் புதல்வரான மா மன்னர் இராஜேந்திர சோழருக்கும் உண்டு.
🐅 காவிரி கரை புலிக்கொடி வேந்தர் எங்களோடு உலாவி இருக்கிறார் என்ற கர்வத்துடன்,
பெருமையுடன், என்றென்றும் மகிழ்ந்து கொண்டு இருக்கும்.
🐅 எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் ,
இம் மன்னர்களின் பெயரை நினைக்கும் போதெல்லாம் மெய் சிலிர்க்கும்.
🐅ஆடி திருவாதிரையில் அவதரித்த நம் பேரரசர் மா மன்னர் இராஜேந்திர சோழரின் பெருமை என்றென்றும் ஓங்கி ஒலிக்கட்டும்.ஓம்.
🐅 சோழம் 🐅
🐅 சோழம் 🐅
🐅 சோழம் 🐅