பேரரசர் தபால்தலை வெளியீட்டு விழா-2025
Aug 10, 2025
ஓம் சக்தி !
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் 1350 வது அவதார திரு நாளை முன்னிட்டு ,மத்திய தபால் துறை சிறப்பு தபால்தலை விரைவில் வெளியிட இருக்கின்றது.....
டெல்லியில் மத்திய தபால் துறை அலுவலகம் வடிவமைத்த தபால்தலையை பேரரசருக்கு வாகைப்பூ சூட வரம் கொடுத்த தாய் கொற்றவை மாகாளத்து காளா பிடாரி திருவடியில், ஆடி மாத பவுர்ணமி தினத்தில் சமர்ப்பிக்கப்பட்டது......
தபால்துறை அலுவலகம் ,தபால்தலை வெளியீட்டு விழாவில் விழா வரை , தபால்தலை வடிவமைப்பு இரகசியம் காக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது......
தமிழ்த்தாயின் தலைமகன், தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட முதல் வேந்தர், வாகைப்பூ சூடிய வேந்தரின் தபால்தலை வெளியீட்டு விழாவினை எழுச்சியோடு கொண்டாட வாருங்கள்.....
தாய் கொற்றவை காளா பிடாரி குறிக்கும் தேதியில்........
பேரரசர் ஆசியோடு,நவம்பர் மாதத்திற்க்கு முன்பே தபால்தலை வெளியிடப்படும்......
ஓம் சக்தி ! கொற்றவை காளா பிடாரி திருவடி போற்றி !
பேரரசர் தபால்தலை வெளியீட்டு விழாவினை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை மற்றும் பேரரசர் தபால்தலை வெளியீட்டு விழாக்குழு -2025 நடத்துகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்....!!!
www.araiyarsuvaranmaran.com