பேரரசர் தபால்தலை வெளியீட்டு விழா-2025
Aug 22, 2025
17-8-2025 ஞாயிற்றுக்கிழமை பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் இரண்டாம் சுவரன் மாறன் தபால் தலை வெளியிட்டு குழு சார்பில் தலைவர் திரு.கே.பி.எம்.ராஜா, செயலாளர் கரூர் திரு.என்.பி.ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் திரு. பேராசிரியர் டாக்டர்.மீ.சந்திரசேகரன் இவர்கள் தபால் தலை அரசு ஆணையை வெளியீட முத்தரையர் முன்னேற்ற சங்கம் இளைஞர் அணி தலைவர் திரு.ஆர்.வி.பரதன் அவர்கள் பெற்றுக்கொண்டார். விழா குழுவினர் திருச்சியில் உள்ள ஒத்தக்கடை, மணிமண்டபம் மதுரையில் ஆணையூரில் உள்ள மூன்று வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து தபால் தலை அரசு ஆணையை வைத்து ஆசிபெற்று , மதுரை செல்லும் வழியில் நமது மேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெரியபுள்ளான் (எ) செல்வம் அவர்களை விழா குழு சந்தித்து அரசு ஆணையை கொடுத்துள்ளோம்.தபால் தலை வெளியிட முயற்சி செய்த பி.ஜே.பி.மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு.இராம சீனிவாசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்து, தபால் தலை வெளியிட அரசு ஆணை பெற்றுத்தந்த மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு விழாக குழு சர்பாக தொலைபேசியில் நன்றி தெரிவித்து , பேரரசர் தபால் தலையை மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட விழா குழு சார்பாக கோரிக்கை வைத்து உள்ளோம்.இதற்கு ஏற்பாடு செய்த பி.ஜே.பி. தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர்.பேராசிரியர் திரு. இராம சீனிவாசனுக்கு விழாக்குழு சார்பில் நன்றி! நன்றி!!
செய்தி வெளியீடு: பேரரசர் தபால் தலை வெளியிட்டு குழு 19-08-2025
அலைபேசி 98429-92228,790-410-1683,
9600569891