அன்னை தெரசா விருது-2025- பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன்
Aug 28, 2025
*அன்னை தெரசா விருது-2025, விருதாளர் பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், திருச்சி*
🙏
*27-8-2025 அன்று JKC Trust நடத்திய அன்னை தெரசா பிறந்தநாள் விழாவில்* .....
🌹
*சமூக சேவகர் பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன் அவர்களின் சமூக சேவை, வரலாற்று மீட்டுருவாக்கம், தொல்லியல் மேற்பரப்பாய்வு, ஆன்மீக தொண்டு,சொற்பொழிவு, பட்டி மன்றம் ,இலக்கியச் சொற்பொழிவுகள் மற்றும் 27 ஆண்டுகள் கல்லூரி ஆசிரியர் பணியினை பாராட்டி " அன்னை தெரசா விருது-2025" எனும் விருது வழங்கப்பட்டது* விருதாளரை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
🙏
மேலும் இவ்விழாவில் 25 க்கும் மேற்பட்ட ஆண்கள் ,பெண்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் என 20 க்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
*பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார்,வழக்கறிஞர் சி.பி.ரமேஸ்,பேராசிரியர் ரவிசேகர் உள்ளிட்டோர் விழாவிற்க்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பேராயர் ஜான் ராஜ்குமார் அவர்களின் 62 வது பிறந்த நாள் விழா வாழ்த்துக்களை அனைவரும் தெரிவித்து மகிழ்ந்தனர்.அனைவருக்கும் நன்றி* !