பேரரசர் பெயரில் தங்க பதக்கம்
Sep 10, 2025
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் பெயரில் தங்க பதக்கம் வழங்கினார் குடியரசுத்தலைவர்
3-9-2025 அன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் 10 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் கலந்து கொண்டு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார்.
கல்வெட்டியல் மற்றும் மரபு வழி மேலாண்மை பட்டய படிப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் S.சூரியராஜ் அவர்களுக்கு குடியரசுத்தலைவர் அவர்கள் தங்க பதக்கம் வழங்கினார்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில்,கல்வெட்டியல் மற்றும் மரபு வழி மேலாண்மை பட்டய படிப்பு துறையில் முதல் மதிப்பெண் பெறும் மானவர்களுக்கு , ஆண்டுதோறும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் பெயரில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை மூலம் அமைக்கப்பட்ட ஆய்வு மையத்தின் சார்பாக தங்க பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இவ்வாய்வு மையம் மூலம் கி.பி.6 ம் நூற்றாண்டு முதல் 9 ம் நூற்றாண்டு இடைப்பட்ட காலங்களில் தமிழக வரலாற்று தொன்மங்களை மீளாய்வும் செய்து வருகிறது.
தங்க பதக்கம் பெற்ற மாணவர் சூரியராஜ் அவர்களை தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் அவர்கள் பாராட்டினார். கல்வெட்டியல் துறைத்தலைவர் பேராசிரியர் ச.ரவி உள்ளிட்ட பேராசிரியர்கள் வாழ்த்தினார்கள்.
அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை தலைவர் ஆர்.வி.பாலமுருகன், துணைத்தலைவர் பட்டுக்கோட்டை ஜோதி,தர்மராஜ, பேராசிரியர் மீ.சந்திரசேகரன் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் பலரும் வாழ்த்தினர்.
மேற்க்கண்ட பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். இரவி,பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் கோ.பத்மநாபன் , உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்,அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.கிருஸ்ணன், பதிவாளர் பேராசிரியர் திருமுருகன் ,,துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மேற்க்கண்ட செய்தினை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் மீ.சந்திரசேகரன் அவர்கள் தெரிவித்தார்.