முத்தரையர் வரலாற்றில் ஐய்யப்பன் சுவாமி
Sep 23, 2025
இந்த படத்தை பார்த்ததும் எனது நண்பர் சொன்னவை ஞாபகம் வருது.
ஐயப்பன் ஒரு அரையர் வகுப்பை சேர்ந்தவர். அதற்கான பட்டையங்கள் இருக்கிறது. சபரிமலையின் அருகே உள்ள மலை வாழ் பழங்குடியினத்தை சேர்ந்தவர். அவரது யோகா பயிற்சியின் மூலம் வன் புலியை ஒரு ஆட்டு குட்டி போல அவரால் கையாள முடியும். அதைதான் புலி பால் கொணர்ந்த நேரத்தில் அதை புராணமாக்கி இருக்கிறார்கள். அவரின் தியான சக்தி, தீர்க்கமான பார்வை, மற்றும் குருகுல பயிற்சி தான் அவருக்கு இவ்வளவு சக்தி கொடுத்திருக்கு என்றார். முத்தரையர் வகையறாக்கள் கேரள அரசிடம் பேசியும் அவர்களுக்கான அங்கீகாரம் சபரிமலையில் தரவில்லை எனவும் அதற்காக போராடியும், கேரள அரசும் பந்தள பரம்பரையும் இவர்களுக்கான அங்கீகாரத்தை தரவில்லை எனவும் அவர் கூறுகிறார். இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. விபரம் அறிந்த ஆராய்ச்சியாளர்கள் தான் தெரிவிக்க முடியும். உங்களுக்கு இது பத்தி தெரிந்தால் சொல்லுங்கள். அந்த பழங்குடியினரின் குல தெய்வம் மதுரை மீனாட்சி. அவர் தான் மளிகை புரத்தம்மா என்றும் சொன்னார்