27 நட்சத்திரங்களுக்கு உரிய வழிபாட்டு தளங்கள்
Mar 06, 2026
*27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் 🙏*
*நமது ஆன்மீக அன்பர்களின் நலன் கருதி, ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத்தலங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.*
*இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆலயங்கள் அனைத்தும், பல யுகங்களின் வரலாற்றுப் பெருமை கொண்டவை.காலப்போக்கில் அழிவுகள் ஏற்பட்டாலும்,அவை தன்னையே புதுப்பித்துக் கொண்டு இன்றும் சக்தி நிறைந்த தலங்களாக விளங்குகின்றன.*
*எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்டஇந்த ஆலயங்களில், இன்றைக்கும் வலிமையான ஆன்மீக அதிர்வுகள் நிலவுகின்றன.*
*தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அருளும், அமைதியும், மனப்பலமும் வழங்குகின்றன.*
*🙏 வழிபாட்டு வழிமுறை*
*கீழே கொடுக்கப்பட்டுள்ள உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய திருத்தலத்தை, அந்த நட்சத்திரம் வரும் தினத்தில், முழு நம்பிக்கையுடன், ஆத்ம சக்தியுடன் வழிபட்டு வாருங்கள்.*
*அதன் பிறகு, உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு புதிய வெளிச்சம் பிறக்கும்.*
*வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சாதாரண நாட்களிலும் இந்த ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால், உங்கள் கஷ்டங்கள் பெருமளவு குறையும்.*
*🛕 27 நட்சத்திரங்களும் – திருத்தலங்களும் 🛕*
*1️⃣ அஸ்வினி*
அருள்மிகு இறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
திருவாரூரிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி.
பஸ் ஸ்டாண்டிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
*2️⃣ பரணி*
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தூரத்தில்,
காரைக்கால் செல்லும் சாலையில் உள்ள நல்லாடை கிராமம்.
*3️⃣ கார்த்திகை*
அருள்மிகு காஞ்சீசுவரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில்
8 கி.மீ. தூரத்தில் கருஞ்சாநகரம்.
மெயின் ரோட்டிலிருந்து அரை கி.மீ.
*4️⃣ ரோகிணி*
அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரே.
*5️⃣ மிருகசீரிடம்*
அருள்மிகு ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., முகாந்தனூர் அருகில்.
*6️⃣ திருவாதிரை*
அருள்மிகு அய்யா வரதீஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
தஞ்சாவூரிலிருந்து 70 கி.மீ., அதிராம்பட்டினம் அருகில்.
*7️⃣ புனர்பூசம்*
அருள்மிகு அதீஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில்
வாணியம்பாடி அருகில்.
*8️⃣ பூசம்*
அருள்மிகு அசயபுரீஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும்
கிழக்கு கடற்கரைச் சாலை வழியில்.
*9️⃣ ஆயில்யம்*
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
கும்பகோணத்திலிருந்து சூரியனார் கோவில் செல்லும் சாலையில் திருவிசநல்லூர் அருகில்.
*🔟 மகம்*
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
திண்டுக்கல்லிலிருந்து நத்தம் செல்லும் சாலையில்
விராப்பட்டி அருகில்.
*11. பூரம்*
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ. தூரத்தில் உள்ள திருவரங்கம் கிராமத்தில் ஆலயம் அமைந்துள்ளது.
*12. உத்திரம்*
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து
22 கி.மீ. தூரத்தில் உள்ள லால்குடி, அங்கிருந்து 5 கி.மீ. தூரத்தில் இடையாற்று மங்கலம் கிராமம்.
*13. ஹஸ்தம்*
அருள்மிகு கிருபா கூபரேஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் குத்தனல்லூர் அருகே,
அங்கிருந்து பிரியும் சாலையில் 8 கி.மீ. தூரத்தில்
கோமல் கிராமம். பஸ், ஆட்டோ வசதி உண்டு.
*14. சித்திரை*
அருள்மிகு சித்திரரத வல்லபெருமாள் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
மதுரையிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் உள்ள
குருவித்துறை. அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில்.
வியாழன், பௌர்ணமி தினங்களில் பேருந்து வசதி உள்ளது.
*15. சுவாதி*
அருள்மிகு தாத்ரீஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
சென்னையிலிருந்து பூந்தமல்லி வழியாக
தண்ணீரை செல்லும் பாதையில்
8 கி.மீ. தூரத்தில் சித்துக்கோடு கிராமம்.
குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பேருந்து வசதி.
*16. விசாகம்*
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
📍 இருப்பிடம்:
மதுரையிலிருந்து 155 கி.மீ. தூரத்தில் உள்ள
செங்கோட்டை, அங்கிருந்து 7 கி.மீ. தூரத்தில் திருமலைக்கோவில். பேருந்து மற்றும் வேன் வசதி உள்ளது.
*17. அனுஷம்*
அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி செல்லும் வழியில்
7 கி.மீ. தூரத்தில் உள்ள திருநின்றியூர்.
*18. கேட்டை*
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில்
13 கி.மீ. தூரத்தில் உள்ள பகவதி கோயில் பஸ் ஸ்டாப்பிற்கு அருகில்.
*19. மூலம்*
அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
சென்னை கோயம்பேட்டிலிருந்து
பேரம்பாக்கம் வழியாக 45 கி.மீ. தூரத்தில்
மம்பேடு கிராமம்.
*20. பூராடம்*
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
தஞ்சாவூரிலிருந்து திருவையாறு சென்று,
அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில்
4 கி.மீ. தூரத்தில் கருவெளி.
*21. உத்திராடம்*
அருள்மிகு பிரம்மஸ்ரீஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
சிவகங்கையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில்
12 கி.மீ. தூரத்தில் ஒக்கூர்,
அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் பூங்குடி.
*22. திருவோணம்*
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில்
20 கி.மீ. தூரத்தில் உள்ள காவேரிப்பாக்கம்,
அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் திருப்பாற்கடல்.
*23. அவிட்டம்*
அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
கும்பகோணம் மகாமகக் குளம் மேற்கு கரையிலிருந்து
4 கி.மீ. தூரத்தில் உள்ள கொடுக்கை கிராமம்.
*24. சதயம்*
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
திருவாரூர் மாவட்டம்,
நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில்
10 கி.மீ. தூரத்தில் திருப்புழையூர்.
*25. பூரட்டாதி*
அருள்மிகு திருவானேஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
திருவையாற்றிலிருந்து 17 கி.மீ. தூரத்தில்
திருக்காட்டுப்பள்ளி,
அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் ரங்கநாதபுரம்.
*26. உத்திரட்டாதி*
அருள்மிகு சகஸ்ரலட்சமீஸ்வரர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
புதுக்கோட்டையிலிருந்து ஆவுடையார்கோவில் சென்று,
அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில்
21 கி.மீ. தூரத்தில் தீயத்தூர்.
*27. ரேவதி*
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
📍 இருப்பிடம்:
திருச்சியிலிருந்து முசிறி சென்று,
அங்கிருந்து தாத்தையங்கார் பேட்டை வழியாக
5 கி.மீ. தூரத்தில் காகுடி கிராமம்.
*இந்த 27 நட்சத்திரத் திருத்தலங்கள்,நமது பூர்வ ஜென்ம கர்மங்களைச் சீர்செய்யும் அதீத ஆன்மீக சக்தி கொண்டவை.*
*உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில்,இந்த ஆலயங்களில் வழிபாடு செய்தால்,மன அமைதி, தடைகள் நீக்கம், வாழ்க்கை முன்னேற்றம் நிச்சயமாக ஏற்படும்.🙏*
Shared by MAHA DIVINE
https://whatsapp.com/channel/0029Va4qFGN42Dcg2yfAce2R