|

ஆன்மீகம்

Nov 08, 2022

⚜️  *திருப் பைஞ்ஞீலி  நீல கண்டர் திருக்கோயில்* 
      🌳  *பசிய நீல நிற வாழை மரத்தால் பெயர் பெற்ற தலம்*.    🌷 *திருநாவுக்கரசரின் பசி தீர்த்த தலம்*.     
       🙏 *வழிபட்டு அருள் பெற்றவர்கள்* .  விஷ்ணு , யமன்,  திருநாவுக்கரசர் மற்றும் பலர்.   
            திருப் பைஞ்ஞீலி  திருச்சிராப் பள்ளிக்கு அருகே உள்ளது. *பசிய நீல நிறமுடைய வாழை மரத்தடியில் லிங்கப் பரம்பொருள் வெளிப்பட்டு இருந்ததால் திருப் பைஞ்ஞீலி*  என்று பெயர். பூஜித்துத் தொழுத திருமாலுக்குப் பரமேஸ்வரன் திரு நீல கண்டராகத் திருக் காட்சி அருளியதால்  திருநீல கண்டர் என்று திருநாமம். நீல கண்டரை வழிபட்ட திருமால் செந்தாமரைக் கண்ணன் என்ற பெயருடன் தனிச் சந்நிதியில் உள்ளார்.   
            *சப்த விடங்கத் திருத் தலங்கள் போன்று இத் திருத் தலம் ஆரண்ய விடங்கர்*  என்ற திருநாமத்துடன் சிறப்பான தியாக ராசர் சந்நிதியைக் கொண்டு புகழ் பெற்றிருந்தது.  *ஆரணிய விடங்கரின் வீதி வலத் திருக் காட்சியைச் சிறப்பிக்கும் சுந்தரர் திருப் பதிகம் தியாக ராஜர் துதியாக*  உள்ளது.
        ⚜️   *பைஞ்ஞீலியார் பேடு அலர்  ஆண் அலர்  பெண்ணும் அல்லதோர்  ஆடலை உகந்த எம் அடிகள்*   (சம்பந்தர்)  
       என்று  ஆணாகவோ  பெண்ணாகவோ  இருபால் அலியாகவோ  இல்லாமல் *தந்தை தாய் சேய் என்ற மூவுருவில் விளங்கி அமர்ந்தாடும் பெருமானைத்*  தெய்வ மழலை காட்டுகிறார்.       தற்காலத்தில் இத் திருக் கோயிலில் நீல கண்டப் பரம்பொருளை அடுத்துத் தியாக ராஜர் கருவறையும்  இல்லை,  தியாக ராஜர் திருவுருவமும் இல்லை.   இருக்க வேண்டிய இவற்றைப் பற்றி நிர்வாகத்திற்குக் கவலை இல்லை.   தீய சக்தி சிறு தெய்வம் அனுமான் போன்ற   மண்ணுலக வாசி என்று ஏதாவது தூணில் இருந்தாலும்  நிர்வாகம் அதைச் சந்நிதியாக்கி வழிபட்டு சிவ நிந்தனை செய்யும்.   
            திருப் பைஞ்ஞீலியில்  யம  தருமன் பூஜை செய்து வழிபட்டு அருள் பெற்றான். **திருக் கடையூரில்* அமிர்த கடேஸ்வரரின் கழலடியால் உதைபட்டு உயிர் இழந்த தர்ம ராஜன் குற்றம் பொறுத்து அருளும்  பெருமானின் திருவருளால் மீண்டும் உயிர் பெற்றுத் திருக் கடையூரில் லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்த பின் *தரும புரியில்* சிவ பூஜை செய்து தன் பதவியையும் யம லோக வாழ்வையும் மீண்டும் அடைந்தான்.  *திரு வாஞ்சியம் வாஞ்சி நாதர் கோயிலில்*  பரமனைப் பூசித்து எருமை வாகனத்தைப் பெற்ற யமன் *திருப் பைஞ்ஞீலியில்* நீல கண்டப் பரம்பொருளை வழிபட்டுத் தொழுது  *பாசம்* (கயிறு) மீண்டும்  கைக் கொண்டான். திருப் பைஞ்ஞீலியில் வெளிப் பிரகாரத்தில் உள்ள சிறு சந்நிதியில் தியாக ராஜர்  திருவடிக் கீழ் யமன் உள்ளான்.  *சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரத்தில்*  யமன் குளம் உண்டாக்கி சிவ பூஜை செய்து தண்டாயுதத்தை மீண்டும்  பெற்றான்.  
             திருப் பைஞ்ஞீலிக்கு  வந்து கொண்டிருந்த திருநாவுக்கரசர் வெய்யிலாலும் பசியாலும் தாகத்தாலும் வருந்தியபோது தன்னலம் இல்லாமல் தொழுது வழிபட்டுத் தொண்டு புரியும் அன்பர்க்கு அன்பனாக அமையும் *பைஞ்ஞீலி நாதர் குளமும் சோலையும் உண்டாக்கி அந்தணராக வந்து பொதி சோறு தந்து அப்பரின் பசியும் தாகமும் தணித்து நிழல் தந்து மறைந்தார்* . இதனால் பைஞ்ஞீலிப் பரமேஸ்வரனுக்குச் *சோறுடைய நாதர்*  என்று அருட்பெயர்.  சோறுடைய லிங்க  சந்நிதி  கோபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது. 
         ⚜️  *பைஞ்ஞீலி எம் ஆர்கிலா அமுதை*  
         🌷  *ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே*  
        என அமுது அளித்து இடர் தீர்த்த பைஞ்ஞீலி நாதரைத் திரு நாவுக்கரசர் போற்றுகிறார். *கருவறைப் பின் சுவற்றில்  ஆண் பாதி பெண் பாதியான இருபால் அம்மை யப்பன் அலிப் பெருமான் உள்ளார்*. கர்பகிருகச் சுவற்றில் அறக்  கடவுள்  பிட்சாடணரும் காட்சி தருகிறார்.   ஓம் நமச்சிவாய !!!🙏🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us