சித்தர்கள் திருப்பாதம் போற்றி
26 Nov, 2024
தொடர்ந்து படிக்கFeb 09, 2023
*கௌமாரம் (Kaumaram) முருகனை முழு முதற் கடவுளாகக் கொண்ட இந்து சமயப் பிரிவாகும். குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டை உடையது. முருக வழிபாடு கௌமாரம் என பெயர்பெற்றது. கௌ என்னும் சொல்லுக்கு மயில் என்ற பொருளையும் மாரம் என்ற சொல்லுக்கு சூரசம்ஹாரம் நடந்த திருச்செந்தூரில், மரமாக நின்ற சூரனை மயிலாக கொண்டதால் கௌ+மாரம் என்று வழங்கி மயில்வாகனனை கௌமாரம் எனும் வழிபாட்டு முறையை ஷண்மதங்களில் ஒன்றாக ஆதிசங்கரர் அருளினார். கௌமார சமயத்தினை தமிழர்கள் கன்னடர்கள் வேடவர்கள் பின்பற்றினர் ...10 நூற்றாண்டிற்கு பிறகு முருகனை வழிபடும் கௌமாரம் சமயம் சக்தயினை (அம்பாள் வழிபாடு) வழிபடும் சாக்தம் சமயம், விநாயகரை வழிபாடும் காணாபத்தியம் சமயம் அனைத்தும் சிவனை முழுமுதற்கடவுளாக போற்றும் சைவசமயத்துடன் இணைக்கப்பட்டது