|

ஆன்மீகம்

May 05, 2023

எங்க   மதுரை  ஹீரோ . (கள்ளழகர்  கதை )

தங்கச்சி மீனாச்சி கல்யாணத்தப் பாக்க ஆசப்பட்டு அழகர்மலையில இருந்து மதுரைக்கு கிளம்புவாரு… சும்மால்லாம் கிளம்பிட முடியாது, அங்க காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்புகிட்ட உத்தரவு வாங்கிட்டு தான் கிளம்ப முடியும். 

அங்க இருக்கிற ஒத்த கருப்ப சாமி ஓராயிரம் கருப்பசாமியா மாறி பக்தர்களுக்குள்ள இறங்கி  பாதுகாப்புக்குக் கூடவே வரும். சாமி இறங்கினவங்க ’திரி’ப் பந்தம் ஏந்தி, கையில் மொரட்டு அருவாளைத் தூக்கிக்கிட்டு கருப்பன் அருளோட சாமியாடிட்டு வருவதை எதிரில் நின்னு பார்த்தா அடிவயித்துல அமிலம் சுரக்கும்.

வருஷத்துக்கொரு தடவ வெளியே வர்றவர சும்மா விட்டுட முடியுமா? வர்ற வழியில கள்ளந்திரி, அப்பன் திருப்பதின்னு எல்லா ஊர்லயும் மண்டகப்படி போட்டு மரியாத பண்ணி கொஞ்சிக் கூத்தாடும் பக்தர்கள் அன்புல தங்கச்சி கல்யாணத்துக்கு நேரத்துக்குப் போகணும்ங்கிறதையே மறந்துடுவாரு. 

 இந்தப் பக்கம் எங்க ஆத்தா மீனாச்சிக்கும், எங்கப்பன் சொக்கனுக்கும் கல்யாணம் நடந்திடும். எங்க வீட்டுக் கல்யாணக் கொண்டாட்டத்துல அந்தப் பக்கம் அழகர் இன்னும் வரலைங்குறதையே இவய்ங்களும் மறந்துடுவாய்ங்க… மங்கையர்க்கரசி திருக்கல்யாணத்துக்காகவே வருஷம் பூராம் காத்திருந்து மதுரை மகராசிக பூராம் மாங்கல்யம் மாத்துவாங்க. 

அதாவது, அன்னிக்கு அம்புட்டு வீட்லயும் கல்யாணந்தேன். ஆத்தாவையும் அப்பனையும் தேர்ல வச்சு ஊர்வலம் சுத்தி வந்தப்புறம் தான், ஐயய்யோ அழகரு வாராம எல்லாம் நடந்துடுச்சேன்னு இவய்ங்களுக்கு சுருக்குனு இருக்கும். இருந்தாலும் எப்படியாவது சமாதானப் படுத்துவோம்னு தென்கரையில நினைச்சுட்டு இருக்கிற நேரத்துல, வடகரையில அழகரு ஆடி அசஞ்சு மதுரைக்குள்ள வந்துடுவாரு.

ராத்திரி கொஞ்சம் காலாறுவோம்னு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு போயிட்டு, அங்க ஏற்கனவே வந்து காத்திருக்கும் நம்ம ஆண்டாள் நாச்சியின் மாலைய தோளில் வாங்கிச் சாத்திக்கிட்டு,  மறுபடி தங்கக் குதிரையில ஏறி கோயில விட்டு வெளியே வரும் அழகைப் பார்த்ததும், ” *கோயிந்தா…. கோய்ய்ந்தோவ்வ்வ்* ”னு லட்சக்கணக்கான குரல்கள் ஒன்னா கூப்பிடும் பாருங்க….. ஆத்மா சிலிர்த்தெழுறதுன்னா என்னானு அப்ப தெரியும்.

சித்திர மாசக் கத்திரி வெயிலுல இத்தன லட்சம் பேரு கூடியிருந்தா வெந்து போயிட மாட்டீங்களானு வெளியூர்க்காரங்களுக்கு தோணலாம். ஆனால்,  தண்ணீர் பீச்சும் பக்தர்கள் தோள் வலிக்க வலிக்க மதுரை குலுங்கியது...
விடியல் துள்ளியது...
வைகை சிலிர்த்தது...

பக்தி திளைத்தது...
மனம் மயங்கியது...
ஆனந்தம் பொங்கியது...

உடல் ஆடியது...
கண்கள் பனித்தது...
அகந்தை அழிந்தது...

நாத்திகம் நடுங்கியது...
ஆத்திகம் செழித்தது...
ஆன்மீகம் ஜெயித்தது...

அன்பு இரட்டிப்பானது...
ஆணவம் அழிந்தது...
அக்கறை கூடியது...

குதிரை குதித்தது...
தண்ணீர் தெளித்தது...
விசிறி வீசியது...

கோவிந்த நாமம் விண்ணைப் பிளந்தது...
பக்தரின் பாத தூளி மணத்தது...

சூரியன் உதித்தது...
இதயத் தாமரை மலர்ந்தது...
தேசம் மகிழ்ந்தது...

*இத்தனையும்...*
*ஒருவரால்...*
*நம் அழகரால்...*

அழகனின் அடிமை
கோபாலவல்லிதாசன்... *

சித்திரை திருவிழா: பச்சைப் பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வந்த கள்ளழகர், மதுரையில் வைகை ஆற்றில் இறங்கினார்.*

*ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு, வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.*

*கள்ளழகரை எதிர்சேவை கொண்டு வரவேற்றார் வீர ராகவ பெருமாள்.*

அனைவருக்கும் மங்களகரமான சோபகிருது ஆண்டு சித்திரை மாதம் 22தி 05.05.2023 வெள்ளிக்கிழமை
இனிய சித்திரா பௌர்ணமி வாழ்த்துக்கள்

மதுரை கள்ளழகர் பச்சை பட்டுத்தி வைகையாற்றில் இறங்கினார் ❤❤❤🙏🙏🙏

#அழகர்...
#கள்ளழகர்...

#மதுரை அழகர்...
#மக்கள் அழகர்...
#மன்மத அழகர்...
#வைகை அழகர்...
#வைகறை அழகர்...

சோலை அழகர்...
மாலிருஞ்சோலை அழகர்...
#மீனாளின் அண்ணன் அழகர்...
#மையல் தரும் அழகர்...

சிறந்த அழகர்...
#சித்திரா #பௌர்ணமி அழகர்...
#தங்க அழகர்...
தங்கமான அழகர்...

நல்லவர்க்கெல்லாம் அழகர்...
#நல்லனவெல்லாம் தரும் அழகர்...
#நம்ம அழகர்...
#நம்பிக்கை தரும் அழகர்...

குழல் அழகர்...
#குதிரை அழகர்...
குழந்தை அழகர்...
#குதூகல அழகர்...

#புன்னகை அழகர்...
பொன்னகை அழகர்...
பாமர அழகர்...
#பட்டு அழகர்...

#எதிர்சேவை அழகர்...
எப்போதும் அழகர்...
எழில் அழகர்...
#ஏற்றம் தரும் அழகர்...

#அழகா...வாடா...
#அழகே...வாடா...
#அருகே...வாடா...
#அன்பே...வாடா...

#உனக்காக இங்கேயும்
ஒரு
கிணற்று தவளை 
#மண்டுவாய்
காத்திருக்கிறது...

வைகறையில்
வைகை கரையில்...
#எனக்கும் தரிசனம் #என்ற...
[


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us