|

ஆன்மீகம்

Jun 15, 2023

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥அழகர்மலை  மேலமர்ந்த
அருள்மணக்கும் ஆண்டவனே
கருணைவடி  உன்னழகை 
காட்டுமப்பா இவ்வுலகில் 
🙏
தேன்மொழில் நிறைந்திருக்கும்
தேன்குடமாம் உன்னழகில் 
கற்றைமலர்க் குழலுடையாள் 
காளியுடன்  நீயிருக்க 
🙏
காளியவ ளோடிணைந்து        குறநடனம்    ஆடினையே
குருகுகொடியே கருப்பழகா  
குறைகளைய வேண்டுமடா 
🙏
ஆசைக ளேதுமின்றி 
அடிதொழுதேன் உன்னடியை 
மதிகுடமாம் உன்னருளை 
மன்னவனே அருளாயோ
🙏
விழிபெருகி கதறுகிறேன் 
வினையகற்ற வேண்டுகிறேன் 
விதிமுடியும் நாள்நெருங்க
வந்தென்னை காத்தருளாய்

அச்சுதனார் சக்தியுடன்
அன்னையவள் உருவெடுத்த 
அடியவர்க்கு வாழ்வளித்த
அழகர்மலை கருப்பழகா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.wwwaraiyarsuvaranmaran. com🙏🙏🙏🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us