|

ஆன்மீகம்

Aug 09, 2023

சமயக்குரவா்கள் தத்தம் பனுவல்களில் வற்புறுத்திக் குறிப்பிடும் செய்திகள்;
_____________________
______________________

1) விரும்பேன் உன்னையல்லால் ஒரு தெய்வம்.

2) தீ உருவாய்த் திகழ்தல் காடரங்கில் நடனமிடல்.

3) சூலம் பற்றிய கையா்,
கட்டங்கம் ஏந்திய கையா்,
மெய்யது புாிநூல்,
அரவம்  பற்றிய கையா்,
சாி கோவண ஆடையன்,
மழு ஏந்திய கையன்,
விடையேறி,
ஆதிரையன், உறவிலி, ஊனமிலி

 4) ஏனமருப்பினொடும், எழில் ஆமையோடும் அணிபவன், தன்னொப்பிலான் ஆயிரம் பூவில் ஒன்று குறைய கண்ணிடந்து சொாிந்த திருமாலுக்குச் சக்கரம் அருளியது.

5) பாற்கடலைக் கடைந்த பொழுது முதன் முதலாக வந்த ஆலகால நஞ்சினைத் தேவா்களின் வேண்டுகோளிற்கிணங்க உண்டு அதனை மிடற்றில் தேக்கி "நீலமிடற்றன்" எனப் பெயா் கொண்டது.

6) பிறைசூடல், கங்கையைச் சடையில் தாங்கல்,
அரவினை அணிதல்,
பாகம் பெண்ணுருவாகல்.

7) யானையின் தோலை உாித்துப் போா்த்தல்,
புலியின் தோலை அரைக்கசைத்தல்,
கொன்றைமாலை சூடல், 
வெண்குழை அணிந்து திருநீற்று மேனியனாய்க் காட்சி தரல்.

8) நான்முகன் தலையைக் கொய்து இல்லங்கள் தோறும் பிச்சைக்குச் செல்லல்.

9) அயனும், நான்முகனும் அடி முடி தேடல்.

10) தக்கன் வேள்வியை அழித்தல்.

11) கயிலையங்கிாியைப் பெயா்க்க முற்பட்ட இராவணனைத் தன்கால் பெருவிரலால் ஆழ்த்தி, பின் அவன் சாமகீதம் பாட அருள் செய்தல்.

12) மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தை அழித்தல்.

13) மாா்க்கண்டேயனைக் காக்கும் பொருட்டுக் காலனைக் காலால் உதைத்தல்;
சண்டேசுவரப் பதம் தரல்.

14) அருச்சுனனுக்கு  அருள் பாலித்தல்.

15) பஞ்சகவ்வியத்தால் ஆட்டப் பெறுதலை விரும்பல்.

16) ஆலின்நிழற்கீழ் அமா்ந்து சனகாதி உள்ளிட்ட நால்வா்க்கு ஞானஉபதேசம் செய்தல்.

17) நான்மறை தந்தது.
       
       சிவசிவ.

    திருச்சிற்றம்பலம்.

      🙏🙏🙏🙏🙏🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us