|

திருவரங்கம் வரலாற்றில் முத்தரையர்கள்

May 18, 2024

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில்‌ கல்வெட்டு ஒன்று

துறையூர் மற்றும் முத்தரச நல்லூரில் உள்ள இரண்டு வேலி நிலங்களை ஆயிரக்கால் திருமண்டபத் திருவிழாவையொட்டி கடவுளுக்கு காணிக்கையாக 100 பொன் விலைக்கு வாங்கிய அவஸ்ரம் மா[ல்ல]ராசய்யனின் சகோதரரின் மகன் சங்கரசையன் காணிக்கை செய்துள்ளார்

முத்தரச நல்லூர் ( முத்தரையர்கள் பெயரில் உருவான ஊர்) கல்வெட்டில் வரும் ஆயிரக்கால் மண்டபம் திருமங்கையாழ்வார் கட்டியது

தென்னிந்தியாவின் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (1909) எட்கர் தர்ஸ்டன் புத்தகத்தில் அம்பலக்காரர் ஜாதி பற்றிய குறிப்பு உள்ளது அதில் உள்ள வரி 👇

ஸ்ரீரங்கத்தில் முத்தரசன் குறடு என்று ன்று அழைக்கப்படும் ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபத்தையும், பழனியில் ஒரு பெரிய மடத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள், இவை இரண்டும் தங்கள் மன்னர்களால் கட்டப்பட்டவை என்று அவர்கள் கூறுகிறார்கள்

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆயிரக்கால் மண்டபம் " முத்தரசன் குறடு " என்றே பெயர் இருந்து உள்ளது இம் மண்டபம் திருமங்கையாழ்வார் கட்டியது தங்கள் முன்னோரின் பெயரை தானே திருமங்கையாழ்வார் வைத்துள்ளார்

🔸மேலும் காஞ்சி வரதராஜ பெருமாள்கோவிலில் வேடுபரி நிகழ்ச்சி நடைபெருகிறது இங்கேயும் முத்தரையர்களுக்கு பரிவட்டம் கட்டி கோவில் மரியாதை செய்யப்படுகிறது.
இங்கே முத்தரையர் மண்டகப்படி அன்று வேடுபரி நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

இங்கு தங்களால் கட்டப்பட்ட மண்டபத்திற்க்கு "ஸ்ரீதிருமங்கை மன்னனவரித்த முத்துராஜ குல பாளையக்காரர் மண்டபம் " என கல்வெட்டி பெயர் பொறித்துள்ளனர்.

Reference : -

🔸SOUTH INDIAN INSCRIPTIONS - VOLUME XXIV ( no 412 )
(INSCRIPTIONS OF THE RANGANATHASVĀMI TEMPLE, SRIRANGAM)

🔸Castes and Tribes of Southern India (1909) Edgar Thurston
VOLUME I—A and B page no 27


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us