ஆசாட நவராத்திரி வழிபாட்டு விழா
Jul 06, 2024
ஆஷாட நவராத்திரி விழா ஆரம்பம் இன்று முதல்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வராஹிக்கு மொத்தம் 64 சொரூபங்கள் உண்டு.
🙏
இப்பிரபஞ்சத்தில் சிவனுக்கு அடுத்த படியாக நெற்றிக்கண் கொண்ட ஒரே ஒரு பெண் தெய்வம் வாராஹி மட்டுமே.
அவளுக்கு சிவ சொரூபி, விஷ்ணு சொரூபி, எமதர்ம சொரூபி என பல சொரூபங்கள் உண்டு.
இந்த சொரூபம் என்ன வென்றால் தேவர்களுக்கும், தேவ லோகத்திற்கும் எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ, தேவ கணங்களுக்கும் முன்பே குறிப்பாக திரிபுரசுந்தரி காளி இந்த தெய்வங்களுக்கு எல்லாம் இவளே போர்ப்படைத் தளபதியாக விளங்கும்
சதுரங்க சேனா .
அதாவது சதுரங்கம் மாதிரி சுற்றி சுற்றி எங்கு பார்த்தாலும் இவளே முன்னாடி நிற்பாள்.
இவளை தாண்டி தான் எங்கும் செல்ல முடியும் என்பதாலேயே இவளுக்கு 12 கைகள் கொண்ட உக்கிர தெய்வமாக நெற்றிக் கண் திறந்து நிற்கின்ற தெய்வம். எல்லாவற்றையும் அழித்துவிட்டு கோபம் தணிந்து சாந்தமாக நிற்கின்ற சொரூபம்...
இது சினம் தணிந்து, உக்கிரம் முடிந்த பின்பு தணிந்து பிறகு நின்று அருள்பாலிக்கின்ற ஒரு சொரூபம்.
அந்த முகத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும் சாந்த சொரூபம் இருக்கும்.
கைகளிலும் உடம்பிலும் ஒரு தெனாவெட்டு இருக்கும்.
ஆக இந்த தெய்வத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்.
பார்க்கத்தான் உக்கிரமாக இருப்பாள்.
ஆனால் மிக அன்பானவள்.
ஒரு வதம் முடிந்த பின்னாடி
எந்த தெய்வமாக இருந்தாலும் வரம் தரும் நிலையில் இருப்பார்கள்.
கோபம் தணிந்து வரமருளும் நிலையில் இருப்பாள் தாய்.
🔥
நாம் அவளிடம் எதை வேண்டுமானாலும் கேட்டுப் பெறலாம்.
ஆஷாட நவராத்திரி எனும் நிகழ்வு
அவரவர் இல்லத்திலேயே கொண்டாடலாம்.
இந்த நவராத்திரியில் வரும் பஞ்சமி மிகவும் விசேஷம்.
🔥
மேலும் அன்னை அவதரித்த மாதம் இந்த ஆடி மாதம். அவளை குழந்தை பாவனையாக முதற் கொண்டு சிறப்பாக வழிபட்டு மகிழ்வோம்.
எல்லாம் அவள் செயல்.
எண்ணியதெல்லாம் நிறைவேறட்டும்.
எண்ணம் சொல் செயல் யாவும் புனிதமாகட்டும். அன்னை பல மாற்றங்களை அளிப்பாள்.
🙏
ஓம் நமோ வாராஹி..
கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகாவாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||
🙏
வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம்||
🙏
அம்பிகையின்
திருவடிகளில் சரணம்
🔥
பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், தலைவர்,அன்னை வாராஹி நற்பணி மன்றம்,திருச்சி.9600569891,9442146182
💥💥💥💥💥💥💥💥