தேங்காய்
Sep 02, 2024
*தேங்காய்.!*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மூடியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்குமிளம் நீரினாலே..
தேங்காய் என்றழைப்பார் என்னை..
ஆசையுடன் ஈன்றவள் பெயர் தென்னை.!
🔥
வாங்கும் கழு நீரைக்கூட
வாய் ருசிக்கும் இளநீராக்கி..
வாரி வாரி தந்தாள் என் அன்னை..
வாழம்போது தேங்காய் என்பார் என்னை..
🔥
தென்னை பெற்ற என்னைப் பற்றி..
தேங்காய் நான் பேசுவதை.. செவிமடுக்க வேண்டுமென உன்னை.. தேங்காய் நான் கேட்டுக் கொள்வேன்.. முன்னே.!
🔥
அரைத்தாலும் சட்டினியாய் நானாவேன்
அருந்தமிழர் இட்டலிக்கு துணையாவேன்.. நாராக உரித்தாலும் மகிழ்வுடனே.. கயிறாவேன்.!கட்டிலுக்கு மெத்தையாவேன்!
🔥
பிள்ளையார்க்கு உடைத்துப்பார்..
பெரும் துன்பம் சிதறி ஓடும்.. எல்லோர்கும் எளியவன் நான்..
என் பெயரே தேங்காயாம்.!
🔥
தலையிலே தேய்க்கின்ற எண்ணையாகி..
தாகத்தைத் தீர்க்கின்ற இளநீராகி.. தென்னை பெற்ற பிள்ளையெனப் பெருமை பெற்றேன்.! உள்ளவரை உதவுவதே எனது நோக்கம்.!
👏
கல்யாண வீட்டினிலே முன்னிருப்பேன்..
காலமெல்லாம் வாழ்கவென வாழ்த்துரைப்பேன்.. இல்லாத இடமில்லை இந்த நாட்டில்.. கடைத்தேங்காய் என்றபெயர் பெற்றேனப்பா..!
🔥
பாங்காக வாழும் வழி ஒன்றுரைப்பேன்..
*தேங்காமல்* ஓடுகின்ற நதியாய் மாறு.. தேங்காய்.. ஓரிடத்தில் நீ தேங்காய்.! ஓடு.! *தேங்காய்* என் கதைதன்னை நினைத்துப் பாடு.!
🙏🙏🙏🙏🙏🙏🙏
www.araiyarsuvaranmaran.com