சிவலிங்கம் - விளக்கம்
28 Apr, 2025
தொடர்ந்து படிக்கApr 17, 2025
பெண் எனும் தெய்வம் நம் இந்தியாவிலேயே அதிகமாக போற்றப்படுகிறாள்!காளி எனும் தெய்வம் பெண்ணின் கோபத்தை குறிக்கிறது!பெண்ணின் கையில் உள்ள சூலம் அவளின் சூல் அதாவது சூளுதல் சூழ்ந்த கற்பப்பையை சூழ்ந்த ஒரு ஆதார ஆயுதம் ஆகும்!கற்பப்பையின் வடிவத்தை கூறுகிறது அதனால் தான் பெண் தெய்வங்களின் கையில் மட்டும் சூலம் உள்ளது!அதாவது உலகை உருவாக்கும் கருவி என பொருள்!எவ்வளவு தெளிவாக நம் சித்தர்கள் அதை வெளிப்படுத்தினர்!மண்ணில்லாமல் விதை முலைக்காது!அதனால் அவளுக்கு பூமா தேவி என பெயர் வந்தது!அதுபோல பெண் தெய்வதின் கர்ப்பஸ்தளம் இல்லாமல் கரு உருவாகாது!இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்!மாதவிடயாய் என்னும் உதிரபோக்கு 10மாதம் நின்றாள்தான் குழந்தை!அந்த உத்தம உதிரமே உயிர்கள் நின்ற உலகம்!அந்த பாக்கியம் பெண் தெய்வங்களுக்கு மட்டுமே இறைவன் தந்துள்ளான்!அதனால் அவளை சித்தர்கள் வணங்க வைத்தனர்!ஆதியில் லிங்க வழிபாடு ஆண் பெண் குறியையே குறித்தன!அது ஆன்மிகத்தில் ஜீவாத்மா பரமாத்மா என பிரித்தனர்!மேலும் நாம் காணும் அனைத்தும் லிங்கரூபம் ஆகும்!அரிசி முதல் அண்டம் வரை எல்லாம் லிங்க ரூபமே!உயிரும் ஆன்மாவும் லிங்க ரூபமே!அதனால் படைப்பாற்றலையே நாம் வணங்குகிறோம்!இன்று விஞ்ஞானம் நிலவை ஒரு கல் என சொல்கிறது அன்றே நம் சித்தர்கள் நிலவை திங்கள் =திண்ணமான கல் திங்கள் என பலாயிர ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டனர்!பெண்ணை மதிப்போம் பெண் எனும் தெய்வத்தை காப்போம்!அவளே அவனுமாகிறாள் அவளே அனைத்தும் மாகிறாள், அவளே உற்பத்தி ஆகிறாள் அவளே தெய்வமாகிறாள்!