சிவலிங்கம் - விளக்கம்
Apr 28, 2025
உடலுக்குள் மும்மூர்த்திகள் செயல்படுவது
நம் இடை சிறுத்துக் குறுகி இருக்கும்.இதனை லிங்கத்தின் அடிப்பீடமாக அமைத்தார்கள்.
நம் உந்தியின் கீழ் 2.5 அங்குலத்தில் உட்புறம் இடம் சத்தியலோகம் என்பர்.
அங்கு ஒரு பையுள்ளது அது தாமரை மொட்டுப்போல் இருக்கும் அதை தாமரை மலர் என்பர் அதிலிருக்கும் சுக்கிலம் இளமையில் மஞ்சள் நிறமாகவும் வாலிபத்தில் வெண்மை நிறமாகவும் மாறும் இதை மானச தடாகம் என்பர்
அதில் ஒர் ஆவி காம உணர்ச்சியை உண்டாக்கி புணர்ச்சியில் சுக்கிலத்தை வெளியேற்றும்.
இதைப் படைத்தல் கர்த்தாவாகிய பிரம்மா என்றனர் உந்தியிலிருந்து ஒருநாடி அங்கு சென்று சேர்வதால் விஷ்ணுவின் உந்தியில் பிரம்மா தோன்றினார் என்றனர்
நம் உடலின் இடைக்குமேல் மார்பு அகன்று இருக்கும் இதனை லிங்கத்தின் மேல்பீடமாக அமைத்தார்கள்.
நம் உந்திக்கு மேல் 2.5 அங்குலத்துக்கு உட்புறம் உள்ள இடத்திற்கு வைகுண்டம் என்றனர்
அங்கு நாம் உண்ணும் உணவு 2மணி நேரத்தில் ஜீரணித்துப் பால்போல் குழம்பாயிருக்கும் இதைத் திருப்பாற்கடல் என்றனர்.
இதன் மேல் ஆலிலை மாதிரி ஒரு சவ்வு மூடியிருப்பதால் இதனை ஆலிலை என்றனர். இதனுள் ஒருநாடி சுற்றித்தலையைத் தூக்கி கொண்டிருப்பதால் அதனை ஆதிசேஷன் என்றனர்.
இதன் மேல் ஒரு சீதளநாடி செல்வதை விஷ்ணு என்பார்கள்.இதை தான் ஆதிசேஷன் மேல் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கின்றார் என்கின்றனர்.
இது நாம் உண்ணும் ஆகாரத்தை சரியான முறையில் சீரணித்து நம் உடலை திடமாகவும் பலமாகவும் வைத்திருக்க உதவுவதால் இதனை காத்தல் தெய்வமாகிய விஷ்ணு என்றனர்
நம் உடல் மார்புக்குமேல் சிரசு வரையில் கழுத்தும் சிரசும் திரண்டு உருண்டையாக இருக்கும்
இதனை குழவிக்கல் ரூபமாய் உருவகித்து லிங்கத்தின் தலையை அமைத்தார்கள்
நம் நெற்றியில் புருவ நடுவில் உட்புறம் உள்ள இடத்திற்குக் கைலயங்கிரி என்றனர் அங்கு அக்னி நாடி ஆடிக்கொண்டிருப்பதை சிவன் நடனம் ஆடுகிறார் என்றனர்.
இங்கு ஆயிரமாயிரம் சிந்தனைகளும் எண்ணங்களும் தோன்றி மறந்து அழிந்து போய் விடுகின்றன இதை அழித்தால் தெய்வம் சிவன் என்றனர்
லிங்கத்தின் கழுத்தில் 5தலைப்பாம்பு ஒன்று மூன்று சுற்று சுற்றி கொண்டுள்ளது அது லிங்கத்தின் தலைக்குமேல் படம் எடுத்து கொண்டிருக்கிறது
நம் உடலில் ஐம்புலன்கள் சிலசமயம் விஷமகுணத்தோடும் அவை செயல்படுவதால் ஐந்து தலை பாம்பு என்றனர்.
இந்த புலன்களால்தான் பிரிக்க முடியாத பற்று பாசம் சுற்றம் உண்டானது இதனால் தான் பாம்பு லிங்கத்தை விட்டு பிரிக்கமுடியாதபடி மூன்று சுற்று சுற்றி கொண்டுள்ளது,
உடலுக்கு சிரசே பிரதானம் அதனால் தான் லிங்கத்தின் தலைக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.