|

அழிக்கப்பட்ட முத்தரையர் கோயில்

Jun 27, 2025

ஆளப்பிறந்த முத்தரையர்களே 🙏

 முத்தரையர் குல மன்னர்கள் அமைத்து வணங்கிய, கற்றளி கோயிலின் இன்றையை நிலையை பாரீர் ?🙏
  🔥
இன்றைய கற்றநாங்கூர் எனும் புதுக்குடி எனும் கிராமத்தில் சிதைக்கப்பட்ட - அழிக்கப்பட்ட ,முத்தரையர் பேரரசின் கோயில்.....?
🔥
இக்கோயிலை மீண்டும் புனரமைக்க அரசு முன் வருமா ?

முத்தரையர் குல மன்னர்களின்  வாரிசுகள்,அமைச்சர்கள்,சட்ட மன்ற உறுப்பினர்கள், சங்கங்கள், தொழில் அதிபர்கள்,பேரரசர் பேரப்பிள்ளைகள் முன் வருவார்களா ?
🙏
திருச்சி- தஞ்சை புறவழிச்சாலையில் துவாக்குடி சுங்கவரிச் சாவடியைத் தாண்டி உள்ள ஊர் புதுக்குடி. இவ்வூரில் பழமையான கற்றளி ஒன்று, புணரமைக்கத் திட்டமிட்டு இன்னும் வேலையாகாமல் உள்ளது. 
🔥
 இக்கோவில் பழமையான கட்டடமைப்புள்ள கோவிலாக முத்தரையர் கட்டக்கலை பாணியில் உள்ளது.  இக்கோவிலில் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த  முத்தரையர்களின் பாடல் கல்வெட்டு  சிதறி கிடைக்கின்றது
🙏
அக்கல்வெட்டுக்களை பொருத்திப் பார்க்கையில் .....
🔥
"தீப்புனலில் இறைவியோடுங் களம் புக்க, அக்கேடிணை எனும் மாபெரும் மலையென....... அந்தனன் ஒன்றியொன்று கருகினவேயந் நாற்பது"
🔥
என்ற பாடல் வடிவ கல்வெட்டு, பேரரசர் சுவரன் மாறன் எனும் பெரும்பிடுகு முத்தரையரின் பாடல் வடிவ கல்வெட்டோடு ஒப்புமை கூறலாம்.
 🔥
இப்பகுதிக்கு அடுத்துள்ள நண்டம்பட்டியில் பராந்தகர் கால சிதைந்த கோவிலின் எஞ்சிய பாகங்கள் உள்ளது. அங்குள்ள கல்வெட்டு ஒன்றில்  "மியாளாகிய முத்தரையன்" என்ற ஒருவர் பெயர் உள்ளது.
🔥
இங்குள்ள "வீரபாண்டியன் தலை கொண்ட கல்வெட்டு" ஒன்றில் இவ்வூரின் பழம்பெயர் நாங்கூர் எனத் தெரிய வருகிறது. நாங்கூர் என்னும் இவ்வூரில்  சமணர்களும், அந்தணர்களும் வாழ்ந்தமையால் அந்தணர்கள் வாழ்ந்த பகுதி பள்ளி அகரம் என அழைக்கப்பெற்றது. இவ்வூரின் அருகே சூரக்குடிப்பட்டியில் சமணர் சிற்பம் உள்ளது. ஒருக்கால் இச்சமணக்கோவிலை, இப்பள்ளி குறிப்பிட்டிருக்கலாம்.
இக்கல்வெட்டுச் சாசனத்தில் வைணவத்திருக்கோயிலான திருவிண்ணகரத்தில் இருந்த ஸ்ரீராகவதேவரான இராமபிரான் திருமேனி முன்பு தன் மைத்துனனான நாராயணன் வைகுந்தனான அனந்த கோப முத்தரையன் என்பவரின் நலம் பெற வேண்டி ஒரு நந்தா விளக்கு  எரிப்பதற்காக பாலைச் சேந்தனான தென்கரை நாட்டு முத்தரையன் என்பவர் 240 வெள்ளாடுகளைத் திருக்கோயில் நிருவாகத்தினரிடம் ஒப்படைத்தார்.
🔥 
இந்த அறக்கொடையை மேற்பார்வையிட்டு அத்தர்மம் அழியாமல் பாதுகாக்க வேண்டிய அதிகாரபூர்வமான உரிமையை நாங்கூர் என்னும் இவ்வூரினருக்காக (புதுக்குடி மக்களுக்கே) உரியது என்பதை இச்சாசனம் தெரிவிக்கின்றது. 
🔥www.araiyarsuvaranmaran.com

இன்றைய புதுக்குடியின் தொன்மையான பெயர் நாங்கூர் என்பதனை இந்த ஆதித்த கரிகாலனின் கல்வெட்டு தெரிவிக்கின்றது. மற்றுமொரு 16ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று மீசெங்கிளி நாட்டு புதுக்குடி என  இவ்வூரை அழைக்கின்றது. பழமையான நாங்கூர் எனும் பெயர், கிட்டத்தட்ட 400 வருடங்களாக  புதுக்குடி என மாற்றி அழைக்கப்பட்டமை தெரியவருகிறது.
🔥
கோவிலின் உறுப்புகள் கற்குவியலாக இன்னும் இங்கே கிடக்கிறது. ஆரம்பிக்கப்பட்ட திருப்பணி கைவிடப்பட்டதால் கோவில் இன்னும் பாழ்பட்டு வருகிறது. முழுமையாக இங்குள்ள கற்களை ஆராய்ந்தால், முத்தரையர்களை பற்றிய வரலாறுகள் இன்னும் நிறைய தெரிய வரும்.   🙏

பல புதிய கோவில்களை கும்பாபிஷேகம் நடத்தும் தமிழக அரசு, இக்கோவிலை தகுந்த வல்லுநர்களை கொண்டுஆராய்ந்து 1300 வருட பழமையான இக்கோவிலினை மீட்டெடுத்து புணரமைக்க வேண்டும். 
🙏
வருமானம் அதிகம் வரும் கோயிலுக்கு மட்டும் அரசு முன்னுரிமை தருகிறது ?

பழமையான கோயிலை ஏன் ? அரசு மீட்டுருவாக்கம் செய்யவில்லை ....? 

தற்போது உள்ள முத்தரையர் குல வாரிசுகள் தாமாக முன் வந்து மீட்பார்களா ? கோயில் திருப்பணி செய்வார்களா ? அங்குள்ள கல்வெட்டுக்களை பாதுகாக்க முன் வருவார்களா ?  முத்தரையர் குல பேரரசின் சாதனைகளை பாதுகாக்க யாருளர் ? 
🙏
www.araiyarsuvaranmaran.com 🙏

நாலடியார் போற்றி வணங்கிய வள்ளல் தன்மை கொண்ட முத்தரையர்கள் இன்றும் இருக்கின்றார்களா ?  திருப்பணி செய்ய முன் வருவார்களா ?

ஓம் சக்தி🔥

கொற்றவை திரு நியமம் சப்தகன்னியர் காளா பிடாரி ஆசியோடு முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் தொடரும்.....!!!
🙏
அவதார சித்தர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் ஆசியோடு மேலும் பல வரலாற்று தொன்மங்கள் உங்கள் பார்வைக்கு .....தொடரும்.....!

விரைவில் பேரரசர் தபால்தலை வெளியீட்டு விழா.....!

www.araiyarsuvaranmaran.com

அனைவருக்கும் நன்றி !

வரலாற்று ஆய்வாளர்ககுக்கும் நன்றி!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us