பேரரசர் தபால்தலை வெளியீட்டு விழா-2025
Jul 14, 2025
வணக்கம். மத்திய அரசிடம் இருந்து நமது பேரரசர் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையரின் 1350ம் ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்வாக தபால் தலை வெளியிட அரசு கடிதம் மூலம் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 6-7-2025 அன்று பேரரசர் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியீட்டு விழாக்குழு திரு.ஆர்.வி.பரதன் அவர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனையும் ஆதரவும் பெறப்பட்டது.
விழாக்குழு ஆலோசகர் பத்மஸ்ரீ தாமோதரன் அவர்களும் விழாக்குழு தலைவர் திரு.கே.பி.எம்.ராஜா , செயலாளர் கரூர்.திரு என்.பி.ரமேஷ் , விழாகுழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திரு.மீ.சந்திரசேகரன் இணை ஒருங்கிணைப்பாளர் திரு.சாய்தங்கவேல் விழாக்குழு உறுப்பினர் திரு.கே..வி.தங்கவேல் உடன் உள்ளனர்.
மேலும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். நன்றி.