வல்லம் வரலாற்றில் முத்தரையர் பேரரசு
Dec 01, 2025
முத்தரையர்கள் பிறந்து வளர்ந்த வல்லம் கோட்டை யாருடையது ?
அகநானூறு 356 பரணர் பாடல் சோழர் வழித்தோன்றல் #நல்லடி வல்லத்து அரசன் என்கிறது
அகநானூறு 336 பாடலும் சோழருள் ஒரு அரசன் ஆரியரைத் தஞ்சையடுத்த வல்லம் என்ற இடத்தில் நிகழ்ந்த போரில் முறியடித்ததாகப் பாவைக் கொட்டிலார் என்னும் புலவர் தெரிவிக்கிறார்
சுந்தர சோழன் அன்பில் செப்பேடு கரிகால சோழனுக்கு அடுத்து கோச்செங்கணான் என்பவனை குறிப்பிடுகிறது மற்றும் கோச்செங்கணான் மகன் #நல்லடிக்கோன் என்பதையும் தெரிவிக்கிறது
பல்லவர் செப்பேடுகள் முப்பது பக்கம் 12 முதல் 16 வரை ரேநாட்டு சோழன் தனஞ்சய முத்துராஜா அண்ணன் சிம்மவிஷ்னு சோழன் என்பவனே கோச்செங்கணான் என்று விரிவாக விளக்கியுள்ளார்
கூன் பாண்டியன் வல்லத்து போரில் பகை மன்னர் ஒருவரை கொன்றான் என்று பாண்டி கோவை பாடல் தெரிவிக்கிறது
வல்லதில் வல்லத்துடையார் கரிகால சோழிஸ்வரம் , அரிகுல கேஸரி ( அரிஞ்சய சோழன் ) ஈஸ்வரம், விக்கிரம சோழ விண்ணகரம் போன்ற சோழ மன்னர்கள் கோயில் இருந்ததை வல்லதில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது
வல்லம் தல புராணம் ஸ்ரீ கண்ட சோழன் அவன் மனைவி வல்லமாள் அவன் மகன் காலகண்ட சோழன் வரலாற்றை கூறுகிறது திருச்சோற்றுத்துறை கல்வெட்டு தென்னவன் இளங்கோ முத்தரையரான கண்டன் பெருமான் என்று குறிப்பிடுகிறது சுந்தர சோழன் அன்பில் செப்பேடு ஸ்ரீகண்டன் விஜயாலய சோழனுக்கு முன்பு ஆட்சி செய்த மன்னராக குறிப்பிடுகிறது
தனஞ்சய முத்துராஜா மூத்த அண்ணன் ( கோச்செங்கணான் ) என்ற சிம்மவிஷ்னு ஆவான் ( இதனை ரேநாட்டு சோழன் எரிகால் முத்துராஜா புண்ணிய குமாரன் மலேபாடு செப்பேடு கூறுகிறது )
தனஞ்சய முத்துராஜா மூத்த அண்ணன் கோச்செங்கணான் அவன் மகன் நல்லடி யை சிம்மவிஷ்னு பல்லவன் வென்று சோழ நாட்டை கைப்பற்றினான் என்று பள்ளங் கோயில் செப்பேடு கூறுகிறது
நல்லடிக்கு பின் வாரிசு இல்லாமல் போக தனஞ்சய முத்துராஜா மூத்த பேரன் வாரிசு உரிமையில் குணமுதிதன் என்ற குவாவன் அவன் வாரிசுகள் வல்லம் கோட்டையில் இருந்து ஆட்சி செய்துள்ளனர் தனது தாத்தா #தனஞ்சயன் பெயரில் தஞ்சை என்ற நகரையும் நிறுவி ஆட்சி செய்துள்ளார்கள்
குணமுதிதன் வாரிசுகள் தஞ்சை ( முத்தரையர்கள் )
🔸குணமுதிதன் என்ற குவாவன்
🔸வல்லம் போரில் இறந்தவன் ( குணமுதிதன் மூத்தமகன் )
🔸பெரும்பிடுகு முத்தரையர் மாறன் ( குணமுதிதன் இளைய மகன் )
🔸இளங்கோ அதியரையர் பரமேசுவரன்
🔸பெரும்பிடுகு முத்தரையர் மாறன்
செந்தலை கல்வெட்டு இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனை வல்லக்கோன், வல்லகோமாறன் என்று புகழ்கிறது
மற்றும் பழனி முத்தரையர் செப்பேடு வல்லம் தஞ்சை ஆட்சி செய்தவர்கள் முத்தரசர் சூரிய வம்சம் என்கிறது