முத்தரையர் நாணயங்கள்
Mar 09, 2026
முத்தரையர் நாணயம் ( 🦁 ☀️🌙 🪷 ⚜️ )
முத்தரைய அரசர்கள் புலவர்கள் வைத்து தமிழ் வளர்த்தும் தமிழ் நூல் தொகுத்தும் கோட்டைகளையும் , கோபுரங்களையும் , எழுப்பினர் அதை போல முத்தரையர்கள் தங்கள் நாட்டில் தங்களின் காசுகளை வெளியிட்டு அதையே தன் நாட்டில் பயன்படுத்தியுள்ளனர்
நாணயம் பற்றிய தகவல் : -
நாணயம் 1 :
• எடை - 3 கிராம்
• வடிவம் - வட்டம்
• ஆண்டு - கி.பி 9
• உலோகம் - செம்பு
• காலம் - முத்தரையர்
• கண்டெடுத்த இடம் - திருவையாறு
• முன்பக்கம் - நிற்கும் சிங்கம் உள்ளது
• பின் பக்கம் - சூரியன் சந்திரனுக்கு நடுவே தாமரை மொக்கு போன்ற வடியம் காணப்படுகிறது
நாணயம் 2 :
• எடை - 3.1 கிராம்
• வடிவம் - வட்டம்
• ஆண்டு - கி.பி 9
• உலோகம் - செம்பு
• காலம் - முத்தரையர்
• கண்டெடுத்த இடம் - திருக்காட்டுப்பள்ளி
• முன் பக்கம் - நிற்கும் சிங்கம் உள்ளது
• பின் பக்கம் - தாமரை மொக்கு போன்ற வடிவத்தின் இருபக்கங்களிலும் சூரியன் சந்திரன் காணப்படுகின்றன
நாணயத்தில் உள்ள விலங்கு சிங்கம் 🦁 என்று சில வரலாற்று ஆய்வாளர்களும் சில வரலாற்று ஆய்வாளர்கள் புலி 🐯 என்றும் கூறுகின்றனர்
தாமரை பதுமநிதியையும் , வேல் போன்றவை இடம்பெற்றிருந்தால் அவை படைபலத்தைக் குறிப்பனவாகும் சந்திரனும் சூரியனும் இடம்பெற்றிருந்தால் அந்தக் குலம் நீடூழி வாழ்தலையும் குறிப்பவையாகும்
நாணயத்தின் முன்புறம் சிங்கத்தை 🦁 அமைத்துள்ளனர் பின்புறம் சூரியன் ☀️ சந்திரன் 🌙 , தாமரை 🪷 ( அல்லது வேல் ⚜️ ) சின்னங்களை பொறித்துள்ளனர்
முத்தரையர் காசுகள் தமிழகத்தில் அதிக அளவில் கிடைக்கவில்லை தஞ்சை, புதுகை பகுதியில் ஏராலமான காசுகள் மண்ணுக்குள் புதையுண்டுகிடக்க வாய்ப்புள்ளது இப்படத்தில் இருக்கும் முத்தரையர் காசுகள் தமிழக அரசு மூலம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பாதுக்காப்பாக உள்ளது