|

மன்னர் திருமங்கையாழ்வார்

Mar 06, 2026

காவல்கார வம்சத்தின் அடையாளம், கல்வி,செல்வம்,வீரம் மூன்றிலும் உயர்ந்த நிலையை அடைந்தவர், திருவரங்கத்தில் "முத்தரசன் குறடு" எனும் ஆயிரங்கால் மண்டபம் அமைத்து வணங்கியவர் மன்னர் திருமங்கையாழ்வார்.... 

 தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட
திருமங்கை ஆழ்வாரின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலச் சிலை  இங்கிலாந்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டு , அந்த சிலைக்குரிய சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் நிறுவப்பட இருப்பதற்கான செய்தியறிந்து முத்தரையர் சமூகம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். 

இது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின்  உறுதியான ,தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைக்கான மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.

திருமங்கை ஆழ்வார், மிகவும் போற்றப்படும் ஆழ்வார்களில் ஒருவர். இவரது பக்திப் பாடல்கள் ‘நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின்’ ஒரு முக்கிய அங்கமாகும். அவரது  புனிதமான சிலை தமக்கே உரிய  இடத்திற்கு மீண்டும் திரும்புவது, பக்தர்களுக்கும் தமிழக மக்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து  கொள்ளையடிக்கப்பட்ட தொல்பொருட்களை  திரும்பப்பெறும் முயற்சிகளை மத்திய அரசு செவ்வனே செய்து வருவது பாராட்டுக்குரியது.

2014-ஆம் ஆண்டு முதல் 600-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. தற்போது, திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையுடன்  சேர்த்து மேலும் நான்கு பழங்கால சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. இது, பண்பாட்டு மீட்டுருவாக்கத்திலும், கலைப் பொக்கிஷங்களைப் பேணிப் பாதுகாப்பதிலும் அரசுக்கு இருக்கும் உறுதியைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை உள்ளிட்ட தொல்பொருட்கள் மீட்கப்பட உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும்  தெரிவித்துக் கொள்கிறோம்...

இனி சிலை திருடு போகாமல் தமிழக அரசு காக்க முன் வரவேண்டும்.....!

ஓம் நமோ நாராயணாய !

முத்தரையர் இலக்கிய வட்டம்,அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.
www.araiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us