|

இராசமல்லன் முத்தரையர்

Aug 30, 2025

" இராஜமல்லன் "

மிகக் கடுமையான போர்க்களம் அது.

சோழர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே ஆன உச்சகட்ட மோதல்.

சோழர் படைகள் அதன் மகா தண்டநாயகன் பஞ்சவன் மராயன் இளவரசர் இராஜேந்திரச் சோழர் தலைமையில் அணிவகுத்தது.

சாளுக்கியப் படைகளோ அதன் பேரரசர் சத்யாச்ரயர் தலைமையில் களம் கண்டது.

ஆரம்பம் முதலே அதிரடியாக சோழர்படை முன்னேறிச் சென்றது.

இளவரசர் இராஜேந்திரர் முன்வரிசையில் களம் கண்டு  சாளுக்கியப் படைகளை சிதறடித்து வெகுவேகமாக சத்யாச்ரயனை நோக்கி முன்னேறினார்.

சாளுக்கியப்படைகளும் இராஜேந்தினின் முன்னேற்றத்தை தடுத்தன. 
தங்களது யானைப் படைகளைக் கொண்டு வியூகம் அமைத்து இராஜேந்திரனின் பாதையைத்  தடுத்தனர்.

சாளுக்கியர்களின் யானைகள் தனது பாதையை மறிப்பதைக் கண்ட இராஜேந்திரன் தனது அருகில் இருந்த சோழர் யானைப் படைகளின் தலைவன் இராஜமல்லன் முத்தரையர் என்பவரை நோக்கி, ..

சாளுக்கியர்களின் யானையைத் தாக்கு என்று கட்டளையிடுகிறார்..

அடுத்த நொடியே மின்னல் வேகத்தில் இராஜமல்லன் சாளுக்கியர் யானையை நோக்கி புயல் போல் பாய்ந்து தாக்கினான். முன்வரிசையில் இருந்த 
சாளுக்கிய யானையைக் கொன்று  சாளுக்கியர் வியூகத்தை உடைத்து தன் தலைவன் செல்ல பாதையை உறுதி செய்தான்.

தடையின்றி முன்னேறிய இராஜேந்திரர் 
சாளுக்கியர்களை போட்டுத் தாக்க..

வழக்கம் போல் இப்போரையும் சோழர்கள் முழுமையாக வென்றார்கள்.

ஆனாலும்...
சாளுக்கிய யானையைக் கொன்ற சோழர் தளபதி இராஜமல்லன் படுகாயமுற்று போர்க்களத்திலேயே 
மரணமடைந்தார்.

அவரது சொந்த ஊரான திருச்சிக்கு அருகே உள்ள ஊட்டத்தூர் என்னும் ஊரில் உள்ள மகாதேவர் ஆலயத்தில் 
இந்நிகழ்வு கல்வெட்டாக பதிக்கப்பட்டது. 

" பெருமாள் திருவாயால் மொழிய சத்யாச்சரயரின் யானையைத் தாக்கியவன்."

என்பது கல்வெட்டு வாசகம்.

இராஜமல்லரின் ஆத்ம சாந்திக்காக நிவந்தமும் தரப்பட்டது. ..

இவரின் முழுப்பெயர்..

" இராஜமல்லன் முத்தரையர் ஆன சுருதிமான் நக்கன் சந்திரன் "

சோழத்தின் ஒவ்வொறு நிகழ்வும் ஒரு வீர வரலாறுதான்..


Refrence ..
A.r.e.no 515 / 1912


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us