ஆளப்பிறந்த முத்தரையர்களே
Sep 29, 2025
🟡❤️முத்தரையர் குல காடவராயர்கள்✨
கூடலூர் முத்தரையன் ஆளப்பிறந்தான்
கடலூர் மாவட்டம் திருவதிகை வீராட்டனேசுவரர் கோவில் கல்வெட்டுகளில் தங்களை முத்தரையர் வம்சத்தவர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.
அதன்படி, இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தை சேர்ந்த கி.பி.1148ம் ஆண்டு கல்வெட்டில் எழிசைமோகனான குலோத்துங்க சோழ காடவராயன் அவர்களின் கல்வெட்டில்
'#கூடலூர்_பைஞ்ஞாக_முத்தரையன்_ஆளப்பிறந்தான் ஏழிசை மோகனான குலோத்துங்க சோழ காடவராயன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
மற்றொறு காடவராயராயரான அரசநாராயண குலோத்துங்கச் சோழ கச்சிராயர் அவர்கள்
இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தை சேர்ந்த கி.பி.1147ம் ஆண்டு கல்வெட்டில்
'#கூடலூர்_பைஞ்ஞாக_முத்தரையன்_ஆளப்பிறந்தான் அரசநாராயணனான குலோத்துங்க சோழக் கச்சிராயன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
"#முத்தரையன்" என்னும் பெயரினை ஊரின் பெயரான 'கூடலூர்' என்பதற்கு பிறகும், காடவராயர்களின் பெயருக்கு முன்பும் பொறித்துள்ளதால் இது 'முத்தரையர் குலத்தை' குறிக்கும் என்பதில் ஐயமில்லை.
எனவே காடவராயர்கள் முத்தரையர் சமூகத்தவர்கள் என்பதை இவ்விரு கல்வெட்டுகளும் தெளிவாக நிறுவுகின்றன...
🟡 காடவராயர் - கச்சிராயர்
வளநாடு (வலையர்நாடு) என்ற பெயரில் ஆட்சி செய்த முத்தரையர் மரபு வழி பல்லவர்கள். பல சிவாலயங்களை எழுப்பி சிறந்த சிவபக்கதான விளங்கியதால் குறிப்பாக கூடலூரில் சிவாலயங்களில் சிறப்பான திருப்பணிகளை செய்து பெயர் பெற்றதால் #கூடலூர்ப்பள்ளி_ஆளப்பிறந்தான்_மோஹன் என்ற சிறப்பு பெயரை பெற்றான். [பள்ளி என்பது கோவில்].
இவர்கள் முத்தரையர் மரபு வழி பல்லவ மரபினர்; ஏறத்தாழ 500 வருடகாலம் சோழரைக் கீழ்ப்படுத்தி. அவர்தம் பெருநாட்டைத் தம் பெருநாடாகக் கொண்டு பேரரசு செலுத்திய பல்லவர் வழியினர் ஆவர். இவர்கள் தென் ஆர்க்காடு ஜில்லாவில் திருநாவலூரை அடுத்த 'சேந்தமங்கலம்' என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு, சூழவுள்ள நிலப்பகுதியை ஆண்டுவந்தனர். இவருள் பலர் அரசியலில் 'நாடு காவல்' புரியும் உத்தியோகஸ்தராகவும் இருந்தனர். அங்ஙனம் இருந்தவருள் ஒருவனே #மோஹன்_ஆட்கொல்லி என்ற #குலோத்துங்க_சோழக்_காடவராயன் என்பவன். இவன் தென் ஆர்க்காடு ஜில்லாவில் திருமாணிக்குழி முதலிய இடங்களில் நாடு காவல் செய்து வந்தவன். இவன் சிறந்த சிவபக்தன்; திருநாவலூர், திருவதிகை, திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) என்ற இடத்துச் சிவன் கோவில்களில் திருப்பணிகள் செய்தவன். இப் பல்லவ மரபினன் திருநாவலூரில் உள்ள சிவபிரானுக்குப் பொன் நகைகளும் வெள்ளிப் பாத்திரங்களும் வழங்கினான்; திருவதிகைப் பெருமானுக்கு வேலைப்பாடு மிக்க கழுத்தணி ஒன்றை அளித்தான்; சில குறிப்பிட்ட நிலங்களிலிருந்து வரும் வருவாயைத் திருவதிகைக் கோவிலுக்கு எழுதிவைத்தான் மூன்று தேவதான கிராமங்களில் இருந்த குறிப்பிட்ட நில வருவாயைத் திருவதிகைக் கோவிலுக்கு எழுதி வைத்தான். இவன் இவ்வறச் செயல்களை ஆறு ஆண்டுகட்குள் (கி. பி. 1140-1146) செய்தான். இவன் காலத்தில் திருவதிகைக்கோவில் மிக்க சிறப்பு பெற்று விளங்கியது. இப்பரம பக்தன் திருமுதுகுன்றம் கோவிலில் 'ஏழிசை மோஹன்' என்ற மண்டபம் ஒன்றைக் கட்டினான். அப்பெயர் இவன் கொண்ட விருதுப் பெயர்களில் ஒன்றாகும். இவன் தன் திறமையாலும் அரச பக்தியாலும் படிப்படியாகப் பல பட்டங்களைப் பெற்றுவந்தான். அப்பட்டங்களாவன👇
1.#கூடலூர்_பைந்நாக_முத்தரையன்_ஆளப்பிறந்தான் ஏழிசை மோஹனான குலோத்துங்க சோழக் காடவராயன்.
2.#பைந்நாக_முத்தரையன்_ஆளப்பிறந்தான் அரச நாராயணன் கச்சிராயன்.
3. கூடலூர்ப்பள்ளி ஆளப் பிறந்தான் மோஹன்.
4. குலோத்துங்க சோழக் கச்சி²ராயன்.
5.ஆளப் பிறந்தான் ஏழிசை மோஹன் என்ற குலோத்துங்க சோழக் காடவர் ஆதித்தன்.
#மீண்டெழும்_முத்தரையர்_மரபினரின்_பல்லவர்_வரலாறு
#முத்தரையர்_குல_காடவராயர்கள்
#பல்லவர்_முத்தரையர்_மரபு_வழியினரே
மீட்டெடுப்போம் நம் வரலாற்றை
புகழ்போற்றுவோம் நம் முத்தரையர் வம்சத்து சேந்தமங்கலம் காடவராயர்கள் மற்றும் பல்லவர்களை உரிமையுடன்.