|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Oct 02, 2025

ரேநாட்டு பொத்தப்பி சோழ முத்துராஜா : -

பராந்தக சோழன் வேலஞ்சேரி செப்பேடு சுந்தர சோழன் அன்பில் செப்பேடு மற்றும் முதலாம் இராஜாதிராஜ சோழன் திருவிந்தளூர் செப்பேடு போன்றவற்றில் விஜயாலய சோழனுக்கு முன் ஸ்ரீ கண்டன் ( காந்தன் ) ஆட்சி செய்தான் என்று செப்பேடு கூறுகிறது

மேலும் பாண்டியன் மன்னன் முதலாம் வரகுணன் மகன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லப பாண்டியன் பொத்தப்பிக் சோழனான ஸ்ரீகண்டன் மகள் அக்களநிம்மடியை மணந்திருந்தான் . அவளுக்குப் பிறந்த வனே தளவாய்புரச் சாசனத்தை வழங்கிய பாண்டியன் பராந்தக வீரநாராயணன் ஆவான் 
 
ரேநாட்டின் ஒரு பகுதியே பொத்தப்பி நாடாகும் ரேநாட்டு சோழர் வழிவந்தவரே பொத்தப்பி சோழர்கள் இவர்கள் இன்றைய சென்னை வரையில் இவர்கள் ஆட்சி பகுதி இருந்தது 

ரேநாட்டு சோழன் புண்ணிய குமார முத்துராஜா வெளியிட்ட மலேபாடு செப்பேடு  நந்திவர்ம சோழனுக்கு சிம்மவிஷ்னு, சுந்தராநந்தன் , தனஞ்சயவர்மன்  என்று மூன்று மகன்கள் என்று தெரிவிக்கிறது 

பொத்தப்பி சோழன் ஸ்ரீ  காந்த சோழன்  தன்னை சுந்தராநந்தன் வழியில் வந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் 

 ஆக ஸ்ரீகாந்த சோழன் தனஞ்சய முத்துராஜா இரண்டாவது அண்ணன் சுந்தராநந்தன் வழியில் வந்தவர்கள் 

முத்தரையர் குவாவன் சாத்தன், ஸ்ரீ காந்தன், வரகுண பாண்டியன் சமகாலத்தில் ஆட்சி செய்தவர்கள் 

ஸ்ரீ காந்தன் பரம்பரை : - 

சோழ , கரிகால சோழன் பிறந்தான் அந்த வரிசையில் அரசன் #சுந்தரநந்தன் பிறந்தார் அந்த வம்சத்தில் நவராமன், எரியமான் ,விஜயகாமன் , வீரார்ச்சுனன் , ஆர்கனிபிடுகு , கோகிள்ளி, #மகேந்திரவர்மன் , #இளஞ்சோழ , நிருபகமன் , திவாகரன் இந்த வம்சத்தில் சோழ அதிராஜா வான ஸ்ரீகாந்த ஸ்ரீமனோஹர சோழன் பிறந்தான் என்று இந்த செப்பேடு கூறுகிறது 
 
ஸ்ரீகாந்தன் பரம்பரையில் வந்த இரண்டாம் மகேந்திரவர்மன் பற்றி ஒரு கல்வெட்டு உள்ளது இந்த கல்வெட்டு அனந்பூர் மாவட்டம் பூதிடிகட்டபள்ளி என்ற ஊரில் உள்ள மகேந்திரவர்மன் கல்வெட்டில் "#கபிபோலா_முத்துராஜா" #மகேந்திரவர்மன் மகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது 

கல்வெட்டு எண் : 495 of 1906 #எரிகால்_முத்துராஜா ( கபிபோலா ) மற்றும் #இளசோழ_மகாராஜா இருவரையும் குறிப்பிடுவது குறிப்பிட்டதக்கது 

ஸ்ரீகாந்த சோழன் வெளியிட்ட செப்பேடுல குறிப்பிட்டுள்ள இளஞ்சோழன் என்பவர் மகேந்திரவர்மன் மூத்தமகன் ஆவார் "கபிபோலா முத்துராஜா" இளைய மகன் ஆவார்

இதன் மூலம் நமக்கு தெரியவரும் உண்மை என்னவென்றால், திருவிந்தளூர் செப்பேட்டினில் குறிப்பிடப்பட்ட ஸ்ரீ காந்தனும் மற்றும் அவருடைய வம்சத்தவர்களான விஜயாலய சோழனும், முதலாம் ராஜ ராஜ சோழனும் ரேநாட்டு பொத்தப்பி சோழ மன்னர்களின் வழிவந்தவர்களே ஆவார்கள்


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us