|

முத்தரையர் வரலாற்றில் பாரி வள்ளல்

May 08, 2026

திருப்பத்தூரில் இருந்து 24கிமி தொலைவில் உள்ளது பிரான் மலை. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் ஆகும். 
இத்தலத்தில் இறைவன் பூமி அந்தரம் சுவர்க்கம் என மூன்று இடங்களாக இருந்து அருள்பாலிக்கிறார். மலை அடிவார கோயில் பூமி என்றும், மலையில் முதல் மட்டத்தில் உள்ளது அந்தரம் என்றும், மலை உச்சியில் உள்ளது சுவர்க்கம் எனவும் அழைக்கப்படுகிறது.
கீழ் தளம் கொடுங்குன்ற நாதர் , இடையில் உள்ளது வைரவர் கோயில் மேல் தளகோயில் உமாமகேஸ்வரர் கோயில் இங்கு இறைவனும் இறைவியும் அருகருகே உள்ளனர். அதற்க்கு சற்று இடப்புறம் இருட்டில் ஒரு சன்னதியில் இறைவனும் இறைவியும் அணைத்தபடி உள்ளதால் இவ்விடத்தில் விளக்கில்லை உமாமகேஸ்வரர் எதிரில் உள்ள மண்டபங்களின் விதானம் ,சாத்து முழுவதும் சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளது.

.இம்மலையை முத்தரைய மன்னர் வள்ளல் பாரியின் பரம்பு மலைஎன்பர், இதனை நினைவூட்டும் விதமாய் ஒரு சுதை சிற்பம் முல்லைக்கு தேர் கொடுப்பது போல் உள்ளது.
2500 அடி உயரமிக்க இம்மலை உச்சியில் பறம்பு மலை பாலமுருகன் கோயில் இருக்கிறது.

சிவகங்கை சீமை ஆண்ட மருது பாண்டியரிடம் ஊமைத்துரை அடைக்கலம் பெற்றார்.அவரை பிரான்மலை மலைமுகட்டில் தான் தங்க வைத்தனர்.வெள்ளையர்களை எதிர்த்து போராட இங்கு உருவாக்கிய பெரிய இரும்பு பீரங்கியும்,ஊமைத்துரை தங்கியிருந்த ’ஊமையன் குடும்பை’ எனும் பாதாள குகையும் இன்றும் பழைய வரலாற்றை நமக்கு வாசித்து காட்டுகின்றன.இந்த பிரான் மலை உச்சிக்கு போக நடைபாதை இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us