|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Aug 25, 2023

பூதிகளரி என்னும் அமரூன்றி முத்தரையன்;

இவனின் கலைத்தொண்டை காணும்போது இவன் மிகப்பெரிய மன்னனாக இருந்திருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அரசமலை என்ற ஊராட்சியில் இவனது கோயில் பணி காணப்படுகிறது. இவன் குவாவன் சாத்தனின் மகனான சாத்தன் பூதிக்கும் "பூதிகளரி" என்ற மகன் இருந்துள்ளான். பூதி களரிக்கு அமரூன்றி முத்தரையன் என்ற பட்டப்பெயர் உண்டு. இவன் இங்கு உள்ள பூவாலைக்குடி என்னும் ஊரில் புஷ்பவனேஸ்வரர் என்ற குகைக்கோயிலை அமைத்துள்ளான்.

இவனது பிற கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டம் திருச்சின்னம்பூண்டி,செந்தலை, திருக்கோற்றுத்துறை, கும்பகோணம் வட்டத்தில் உள்ள கோடிக்காவல் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. இவனால் கட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்ட கோயிலைக் காணலாம் இக்கோயிலில் பதிமூன்று கல்வெட்டுகள் உள்ளன. 

ஆதாரம் ARE 142/1907 DAMILILA Vol 1R78
முத்தரையர் ஆர்.திருநாடன் காசிநாதன் பக்:96


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us