|

முத்தரையர் நாட்டின் தலைநகரமும்- நாகத்தீ

Jul 12, 2025

எழிலார்ந்த ஐயனார் சிற்பம். காலத்தால் மிகவும் மூத்த ஐயனார் இவர்.

தஞ்சை - திருவையாறு சாலையில் அம்மன்
பேட்டையிலிருந்து 2.கி.மீ. தொலைவில் உள்ள நாகத்தி என்னும் ஓர் அழகான கிராமம்( முத்தரையர் தலைநகரம்).. சிதைந்துபோன கோவிலின் எச்சத்தின் மிச்சமாக அழகிய பிரம்மாண்ட ஐயனார் சிற்பம் ஒன்று உள்ளது.
பல்லவர் கலையமைதியில் அமைந்த தனித்துவமான ஐயனார் தன் தேவியான பூரணையுடன் காட்சிதருகிறார்.

பீடம் ஒன்றில் ஐயன் அமர்ந்திருக்க அவருக்கு  அருகே அவரது தேவி நின்றுள்ளார். 6 அடி உயரத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட எழிலார்ந்த சிற்பம்.

கிரீடமகுடமும் ஜடாபாரமும் கொண்டு காதில் பத்ரகுண்டலம்
அணிந்து வலக்காலை பீடத்தின் மேல் குத்திட்டும் இடக்காலை தொங்கவிட்டும் வலதுகரத்தை முழங்கால் மேல் அமர்த்தி இடக்கரத்தை பரவவிட்டும் அமர்ந்துள்ளார்.  பீடத்தின் பக்கவாட்டில் வேட்டை நாய் ஒன்றுள்ளது. பூரணா தேவியானவள் நின்ற கோலத்தில்  காட்சிதருகிறார்.. பீடத்தின் மேல் ஒரு அரசனைப்போல் கம்பீரமாக அமர்ந்த ஐயனின் கோலம் வெகு அற்புதமான ஒன்று.

ஏறக்குறைய 7 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த பல்லவர் கால கலையமைதியுடன் வெகு சிறப்பான ஒரு ஐயனார் சிற்பம்.

இன்று ..
நம்மால் சிறு தெய்வம் என்று அழைக்கப்படும் ஐயனார் வரலாற்று காலங்களில் பெருந் தெய்வமாகவே போற்றிச் சிறப்பிக்கப்பட்டார் என்றுதான் வரலாறு பதிவுசெய்துள்ளது.

#ஐயனார்
#பெருந்தெய்வம்
#காவல்தெய்வம்
#தமிழர்வரலாறு🔥💪



தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us